மேலும் அறிய

Opposition Meeting: ஜூலை 17, 18 தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் அறிவிப்பு!

Opposition Meeting : ஜூலை-17,18-ம் தேதிகளில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜூலை-17,18-ம் தேதிகளில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். 

பெங்களூருவில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக காலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ட்விட்டரில் அதிகாரப்பூர்வ தேதி குறித்து  அறிவிப்பௌ வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் கூட்டம் - பாட்னா

 2014- ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு என நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

எனவே, வரவிருக்கும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. அதன் முதல் முயற்சியாக, பிகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 23ல் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் இதில் ஆலோசிக்கப்பட்டது. 

2-வது கூட்டம் 

இதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம், முதலில் ஜூலை மாதம், சிம்லாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. அதாவது பெங்களூருவில் ஜூலை 13,14ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாபது.மகாராஷ்டிரா அரசியிலில் அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளதால், பெங்களூருவில் நடைபெறவிருந்த கூட்டம் ஒத்துவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

என்ன காரணம்?

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருபவர் சரத் பவார். அரசியல் சாணக்கியராக கருதப்படும் இவரால்தான் சாதிக்க முடியாத ஒன்றை எதிர்க்கட்சிகள் சாதித்தது. மகாராஷ்டிராவில் எதிரெதிர் துருவங்களாக கருதப்பட்ட காங்கிரஸையும் சிவசேனாவையும் இணைத்து கூட்டணி ஆட்சி நடத்தினார்.

ஆனால், தற்போது, இவருடைய கட்சியே இரண்டாக உடைக்கப்பட்டிருப்பது தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.எதிர்க்கட்சியாக உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார், கட்சியை உடைத்து பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்துள்ளார்.பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சூழலில், சரத் பவாருக்கு நேர்ந்துள்ள அரசியல் நெருக்கடி தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மேலும், நாடாளுமன்று மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

மேலும் வாசிக்க..

Thirumavalavan VCK: உள்நோக்கம் ஏதுமில்லை.. மாற்றுத்திறனாளிகள் பொறுத்தருளவும்; வருத்தம் தெரிவித்த திருமாவளவன்

TN Rain Alert : உஷார் மக்களே... தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget