மேலும் அறிய

ISRO GSLV Launch: என்.வி.எஸ் புதிய வழிகாட்டு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ.. எப்போது? சிறப்பம்சம் என்ன?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வரும் மே 29 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் என்.வி.எஸ் என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வரும் மே 29 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-1 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

இஸ்ரோ 2020 ஆம் முதல் கடந்த ஆண்டு வரை ஆண்டுக்கு 2 செயற்கைக்கோள் மட்டுமே விண்ணில் செலுத்தியது. இந்த ஆண்டு மூன்றாவது ராக்கெட்டை வரும் 29ஆம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சாலை, கடல் மற்றும் விமான போக்குவரத்துக்கு வழிகாட்டுவதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். பிரிவில் 1ஏ, 1பி என மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-22, பி.எஸ்.எல்.வி. சி-24, பி.எஸ்.எல்.வி. சி-26, பி.எஸ்.எல்.வி. சி-27, பி.எஸ்.எல்.வி. சி-31, பி.எஸ்.எல்.வி. சி-32 உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் ஜூலை 2013-ம் ஆண்டு, ஏப்ரல், அக்டோபர் 2014-ம் ஆண்டு, மார்ச் 2015-ம் ஆண்டு , ஜனவரி 2016-ம் ஆண்டு மற்றும் மார்ச் உள்ளிட்ட ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட்டது.

இதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-ஜி என்பது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். விண்வெளிப் பிரிவில் உள்ள 7 செயற்கைகோள்களில் 7-வது செயற்கைகோளாகும். இந்த செயற்கைக்கோள் 2016 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது அதன் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில். அதற்கு மாற்றாக வேறு செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இது என்.வி.எஸ் என பெயரிடப்பட்டுள்ளது.  இது அடுத்த தலைமுறை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 விண்கலம் மூலம் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.15 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் 28 அல்லது 29 ஆம் தேதி தொடங்கும்.  

NavIC ஆனது ஏழு செயற்கைக்கோள்கள் மற்றும் 24 மணி நேரம் இயங்கும் தரை நிலையங்களின் வலையமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்மீன் கூட்டத்தின் மூன்று செயற்கைக்கோள்கள் புவிசார் சுற்றுப்பாதையிலும், நான்கு செயற்கைக்கோள்கள் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையிலும் ( inclined geosynchronous orbit) நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதே திட்டத்துடன் இஸ்ரோ தனது முதல் சூரிய ஆய்வு திட்டமான ஆதித்யாவின் முதல் சோதனை திட்டம் ஆதித்யா-எல் 1 இந்த ஆண்டில் மூன்றாம் காலாண்டில் விண்ணில் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் ராக்கெட்டுக்கான 2 சோதனை ராக்கெட்டுகளில் ஒன்று இந்த ஆண்டு பிற்பகுதியில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.

TN 10th Supplementary Exam: 10 ஆம் வகுப்பு தேர்வில் 78,706 பேர் தோல்வி.. வெளியானது துணைத்தேர்வுக்கான அறிவிப்பு..!

Private vs Govt Schools: 10 ஆம் வகுப்பு தேர்வில் மாஸ் காட்டிய அரசுப் பள்ளிகள்.. பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம் எவ்வளவு?

10th Result District Wise: ’படிப்பே எங்கள் மூச்சு’ .. 10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த பெரம்பலூர்.. கடைசி இடம் இந்த மாவட்டமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Embed widget