10th Result District Wise: ’படிப்பே எங்கள் மூச்சு’ .. 10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த பெரம்பலூர்.. கடைசி இடம் இந்த மாவட்டமா?
TN 10th Results 2023 District Wise Pass Percentage: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடமும், ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடமும் பெற்றுள்ளது.
TN 10th Results 2023 District Wise Pass Percentage: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடமும், ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடமும் பெற்றுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி ரிசல்ட்
2022- 23ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் சுமார் 9,14, 320 மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை நடைபெற்றது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 தேர்வு முகாம்களில் நடைபெற்ற நிலையில், இப்பணியில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். மேலும் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நிறைவடைந்து முதலில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் அதன்பின்னர் தேர்வு முடிவு தேதி மே 19 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் திட்டமிட்டபடி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவ, மாணவிகள் தெரிந்துக் கொள்ளலாம். மேலும் தேர்வர்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கும் முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக விவரம்
இதனிடையே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் (97.67% ), சிவகங்கை (97.53%), விருதுநகர் (96.22%) ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது. 4வது இடத்தில் கன்னியாகுமரி (95.99%), 5வது இடத்தில் தூத்துக்குடி (95.58%), 6வது இடத்தில் அரியலூர் (95.40%), 7வது இடத்தில் ஈரோடு (94.43%), 8 வது இடத்தில் திருச்சி (94.28%), 9வது இடத்தில் திருநெல்வேலி (94.19%), 10வது இடத்தில் தென்காசி (94.12%) ஆகிய மாவட்டங்கள் முதல் 10 இடத்தில் உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் 83.54 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.
பிற மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம்
மாவட்டம் | தேர்ச்சி சதவிகிதம் |
திருப்பூர் | 93.93% |
ராமநாதபுரம் | 93.86% |
கோயம்புத்தூர் | 93.49% |
திருப்பத்தூர் | 93.27% |
நாமக்கல் | 92.98% |
புதுக்கோட்டை | 92.31% |
தஞ்சாவூர் | 92.16% |
மதுரை | 91.79% |
திண்டுக்கல் | 91.77% |
கரூர் | 91.49% |
வேலூர் | 91.34% |
சேலம் | 91.13% |
திருவாரூர் | 90.79% |
விழுப்புரம் | 90.57% |
காஞ்சிபுரம் | 90.28% |
தேனி | 90.26% |
தருமபுரி | 89.46% |
கள்ளக்குறிச்சி | 89.34% |
சென்னை | 89.14% |
திருவண்ணாமலை | 88.95% |
நீலகிரி | 88.82% |
திருவள்ளூர் | 88.80% |
கடலூர் | 88.49% |
செங்கல்பட்டு | 88.27% |
மயிலாடுதுறை | 86.31% |
கிருஷ்ணகிரி | 85.36% |
நாகப்பட்டினம் | 84.41% |
ராணிப்பேட்டை | 83.54% |