Indian Railway: வாவ் இப்படி ஒரு சாதனை.. செப்டம்பர் மாதத்தில் இந்திய ரயில்வே செய்த சாதனை இதுதான்..
செப்டம்பர் மாதத்தில் அதிக அளவில், சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.
இந்திய ரயில்வே மூலம் கொண்டு செல்லப்பட்ட சரக்குகளின் அளவானது, செப்டம்பர் மாதத்திலேயே இதுவரை இல்லாத வகையில், 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிக அளவு கொண்டு செல்லப்பட்டுள்ளது
இந்திய ரயில்வே சாதனை:
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு, சரக்குகளை சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிற பயணியை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சரக்குகளை கையாள்வது குறித்தான தகவல்களை, இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
அதில் தெரிவித்துள்ளதாவது, 2022 ஆம் ஆண்டும் சரக்குகளை எடுத்துச் சென்றதில் செப்டம்பர் மாதத்தில், இந்திய ரயில்வே 115.80 மெட்ரிக் டன்னாக சாதனை படைத்தது.
சரக்குகள் எடுத்துச் செல்லப்பட்டதில் 2021 செப்டம்பர் மாதத்தை விட , இந்த வருடம் செப்டம்பர் மாதம் 9.15% வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 25 மாதங்களாக, ரயில்கள் மூலம் ஏற்றிச் செல்லப்படும் சரக்குகளின் அளவு இதற்கு முன்பு இருந்ததை விட அதிகரித்து சாதனை புரிந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில், 115.80 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரயில்வே சாதனைhttps://t.co/aQIwWuLnxr@PIB_India @MIB_India
— PIB in Tamil Nadu (@pibchennai) October 2, 2022
சரக்குகள்:
6.8 மெட்ரிக் டன் நிலக்கரி, அதைத்தொடர்ந்து 1.2 மெட்ரிக் டன் இரும்புத் தாது, 0.4 மெட்ரிக் டன் சிமெண்ட் மற்றும் க்ளிங்கர், 0.3 மெட்ரிக் டன் உரங்கள் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றி ரயில்வே சாதனை படைத்துள்ளது. நிதியாண்டு 2022-23-ல் ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் மற்றொரு சிறப்பம்சமாக அமைந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 1,575 ரேக்குகள் கொண்டு செல்லப்பட்டதுடன் ஒப்பிடுகையில், நிதியாண்டு 2022-23 இல் 2,712 ரேக்குகள் கொண்டு செல்லப்பட்டு, 72.2% வளர்ச்சியைப் பதிவு செய்தன.
ஏப்ரல் 1, 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை ரயில்களில் கொண்டு செல்லப்பட்ட மொத்த சரக்குகளின் அளவு 736.68 மெட்ரிக் டன் ஆகும். இது 2021-22 இன் அளவான 668.86 மெட்ரிக் டன்னை விட 10.14% அதிகம். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு சரக்குகளை எடுத்துச் செல்வதில், அதிகளவை கடந்தது இரயில்வே ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: IND vs SA 2nd T20I LIVE: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தென்னாப்பிரிக்கா.. அசத்தும் இந்தியா..
Also Read: Gandhi Jayanti: காந்தி ஜெயந்தி; 78 ஆண்டுகள் வாழ்ந்த காந்தி குறித்தான 78 எளிமையான வரலாற்று தகவல்கள்