மேலும் அறிய
Advertisement
Gandhi Jayanti: காந்தி ஜெயந்தி; 78 ஆண்டுகள் வாழ்ந்த காந்தி குறித்தான 78 எளிமையான வரலாற்று தகவல்கள்
Gandhi Jayanti: காந்தி பிறந்தநாளையொட்டி, அவர் குறித்தான 78 சுவாரஷ்யமான தகவல்களை எளிமையான வகையில் தெரிந்து கொள்வோம்
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவர் வாழ்ந்த 78 ஆண்டுகளை குறிக்கும் வகையில் 78 சுவாரஷ்ய தகவல்களை தெரிந்து கொள்வோம்.
- மகாத்மா என்று அன்போடு அழைக்கப்படுகின்ற காந்தியின் முழுப்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
- குஜராத் மாநிலம் போர்பந்தர் கிராமத்தில் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி 1969 ஆண்டு பிறந்தார்
- காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவரை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் இந்நாளில் இந்தியாவில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
- இவரது தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி, தாயாரின் பெயர் புத்திலிபாய்
- காந்தியின் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர், ஒரு சகோதரி மற்றும் இரண்டு சகோதரர்கள். காந்தி கடைசியாக பிறந்தார்.
- காந்திக்கு 13 வயதில் கஸ்தூரிபாயுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 மகன்கள் பிறந்தனர்.
- 18 வயதில் பள்ளி படிப்பை முடிக்கிறார்.
- பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்து புறப்படுகிறார்.
- பாரிஸ்டர் படிப்பு முடித்து இந்தியா திரும்பிய காந்தி, மும்பையில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.
- மும்பையில் பார்த்த வேலை வெற்றிகரமாக அமையாத காரணத்தால், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நீதிமன்றத்திற்கு வருபவர்களிடம் படிவங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டார்.
- பின்னர், தென்னாப்பிரிக்காவில் தகுதிகேற்ற வேலை இருப்பதாக அறிந்து 1893 ஆம் ஆண்டு புறப்படுகிறார்.
- தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்காட சென்றபோது, தலைப்பாகையை கழட்டுமாறு உத்தரவிடப்பட்டார். ஆனால் காந்தியோ நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.
- பிரிட்டோரியா செல்வதற்காக, ரயிலின் முதல் வகுப்பில் டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொண்டார். ஆனால் அவரை வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக பாதி வழியிலேயே பீட்டர் மாரிட்ஷ்பர்க் என்னும் ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டார்.
- அப்பொழுது, தென்னாப்பிரிக்காவில் ஆங்கில ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது, இன பாகுபாடும் நிறவெறியும் மிகுந்து காணப்பட்டது.
- வீட்டில் குடும்பம் என்றே இருந்த காந்திக்கு, இது போன்ற பிரச்சினைகள் புதிதாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தன.
- இந்த சம்பவங்கள் மூலம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கருப்பின மற்றும் இந்திய மக்களின் நிலைகளை புரிந்து கொண்டார்.
- தென்னாப்பிரிக்காவில் பணிபுரிந்ததற்கான காலம் காந்திக்கு முடிவடைந்தது
- ஆங்கிலேய அரசு, தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் வாக்குரிமையை பறிக்க சட்டம் இயற்றப் போவதை அறிகிறார்.
- காந்தியின் நண்பர்கள், சட்டம் படித்த காந்தியிடம் உதவுமாறு கேட்கின்றனர்.
- காந்தியும் இந்தியா செல்லும் முடிவை மாற்றிக் கொண்டு ஆங்கிலேயர்க்கு எதிராக, அவர் வாழ்நாளில் முதல் அகிம்சை போராட்டத்தை நடத்துகிறார்.
- அதன்படி, வன்முறையில் ஈடுபடாமல் அமைதியான முறையில் சட்ட நகல்களை தீயிட்டு கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்.
- 1894 ஆம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
- இவ்வமைப்பின் மூலம் இந்தியர்களை ஒருங்கிணைத்து போராட ஊக்கமளித்தார்.
- இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தின் மூலம் காந்தி உள்ளிட்ட இந்தியர்கள் பல முறை சிறை சென்றனர்.
- பின்னாளில் ஆங்கிலேயர்கள், இந்தியர்களின் கோரிக்கைகளை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது,
- தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் காந்தி வெற்றி கண்டார்.
- 1915 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி தாயகம் திரும்பினார். இந்த நாளை நினைவு கூறும் வகையில், இந்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினமாக அறிவித்துள்ளது
- இந்தியா வந்த காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே சிறப்பான வரவேற்பளித்தார்.
- இந்தியாவிலுள்ள மக்கள், தென்னாப்பரிக்காவில் காந்தி நடத்திய போராட்டங்களை அறிந்திருந்தனர்.
- 1915-ல்இந்தியா வந்த காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ்-ல் இணைந்தார்.
- 1917 ஆம் ஆண்டு பீகார் சம்பராணில் விவசாயிகளுக்காக, இந்தியாவில் முதல் சத்தியாகிரக போராட்டத்தை துவங்குகிறார்.
- அப்போது விவசாயிகளின் நிலையை பார்த்து, அவரும் காலணி அணிவதை கைவிடுகிறார்.
- 1918 ஆம் ஆண்டு, கேதா சத்தியாகிரகம் மற்றும் அகமதாபாத் மில் தொழிலாளர்களுக்காக சத்தியாகிரக போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார்.
- இதையடுத்து, காந்தியின் செல்வாக்கு, இந்தியாவில் படிப்படியாக வளர ஆரம்பித்தது.
- 1919 ஆம் ஆண்டு சென்னை வருகிறார்
- அப்போது ஆங்கிலேயர்கள் ரௌலட் சட்டத்தை கொண்டு வருகின்றனர். அதன்படி, விசாரணையின்றி யாரையும் கைது செய்யலாம்.
- சென்னை வந்த காந்தியை பாரதியார் சந்தித்ததாகவும், பாரதியாரை இந்தியாவின் சொத்து என காந்தி சொன்னதாகவும் கூறப்படுகிறது.
- ஆங்கிலேயரின் அடக்குமுறைகளை எதிர்க்கும் வகையில், 1920 ஆம் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தொடங்குகிறார்.
- இதன்படி ஆங்கிலேய அரசுக்கு, ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என அறிவுறுத்துகிறார். யாரும் ஆங்கிலேயருக்காக வேலைக்குச் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறார்.
- இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக, 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரை வருகிறார்.
- அப்போது, விவசாயிகள் அரை ஆடை அணிந்து விவசாயிகள் இருப்பதை, தானும் அவ்வாறே இருக்கப்போவதாக அறிவிக்கிறார்
- அன்றிருந்து அரையாடை அணியும் வழக்கத்தை கடைபிடிக்க ஆரம்பித்தார்.
- 1922 ஆம் ஆண்டு சௌரி சௌராவில் போராட்டம் கலவராமாக மாறியது. 3 மக்கள் பலியாகினர். 22 காவலர்கள் உயிரிழந்தனர்
- ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெறுவதாக காந்தி அறிவித்தார். போராட்டத்தை நிறுத்துமாறு மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
- இதனால் ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்து போனது.
- இதனால் காந்தியின் மீது, தேசியவாத இளைஞர்கள் கோபமடைந்தனர்.
- பல இளைஞர்கள், ஆயுதப் புரட்சி இயக்கத்தில் சேர்ந்தனர்.
- 1924 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- கர்நாடக மாநிலம் பெல்காமில் காந்தி தலைமையில் நடைபெற்ற ஒரே மாநாடு இதுவாகும்.
- 1930-ல் சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்கினார்.ஆங்கிலேய அரசு கொண்டு வரும் எந்த ஒரு சட்டங்களையும் ஏற்க கூடாது என தெரிவிக்கிறார்
- சட்ட மறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, உப்புக்கு எதிரான வரியை கண்டித்து உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கினார்.
- குஜராத் மாநிலம், சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி வரை நடை பயணம் மேற்கொள்கிறார்.
- சுமார் 400 கி.மீ, நடைபயணம் மேற்கொண்டார். அவருடன் சரோஜினி நாயுடுவும் பங்கேற்றார்.
- இதன் காரணமாக காந்திஜி கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
- 1931 ஆம் ஆண்டு 2வது வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றார்.
- ஆனால் காந்தி ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார். கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது
- மூன்றாவது மாநாட்டில் அம்பேதகர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
- அப்போது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு, இட ஒதுக்கீடை விரிவாக்குவதாக ஆங்கிலேய அரசு தெரிவித்தது
- இதை எதிர்த்து, எரவாடா சிறையில் இருந்த காந்தி, சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
- இதையடுத்து, இட ஒதுக்கீடு விவகாரத்தை கைவிடுவதாக அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் சம்மதம் தெரிவிக்கின்றனர்.
- இதையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்த காந்தி, காங்கிரஸ்-ல் தானே இட ஒதுக்கீடு வாங்கி தருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
- 1937 ஆம் ஆண்டு சென்னை இலக்கிய மாநாட்டுக்கு தலைமை வகித்தார். அப்போது உ.வே.சாமிநாதயரை சந்தித்தார். அப்போது உ.வே.சா-விடம் தமிழ் கற்றுக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
- 1939-ல் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் சுபாஷ் சந்திர போஸ்-க்கு எதிராக பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார்.
- 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை, இந்திய அளவில் நடைபெற காரணமாக இருந்தார்.
- இரண்டாம் உலக போர் காலம் என்பதால், போராட்டத்தை கண்டு ஆங்கிலேய அரசு அச்சம் கொள்ள ஆரம்பித்தது.
- இதனால் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ல் கைது செய்யப்பட்டார்.
- பின்னர் 2 ஆண்டுகள் கழித்து 1944 ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
- இந்தியா - பாகிஸ்தான் பிரியக் கூடாது என ஜின்னாவை சமாதனப் படுத்த். காந்தியின் முயறிசி பலனளிக்கவில்லை.
- காந்தி இந்துவாக வந்திருந்தால் பரவாயில்லை, அவர் மதங்களை இணைக்கும் பாலமாக இருக்கிறார் என ஜின்னா சொன்னதாக கூறப்படுகிறது
- இதிலிருந்தே காந்தியின் மதசார்பற்ற பண்பை அறியலாம்.
- காந்தி எவ்வளவு முயன்று பிரிவினையை தடுக்க முயன்றார்
- ஆனால் நிலைமை கைமீறி விட்டதை புரிந்து கொண்டார். வேறுவழியின்றி பிரிவினைக்கு ஒப்புக்கொண்டார்
- 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இந்தியா சுதந்திரம் அடைந்தது.
- காந்தியின் கடைசி உண்ணாவிரத போராட்டம் 1948 ஆண்டு ஜனவரி (13-17)
- 1948, ஜனவரி 30 காந்தி நாதுராம் கோட்சே-வால் சுட்டுக் படுகொலை செய்யப்பட்டார்.
- விடுதலைக்காக பெரும் பங்கு வகித்த தலைவர்களில், எந்தவித பதவியும் வேண்டாம் என காந்தி தெரிவித்ததை போன்று உலகளவில் தலைவர்களை காண்பது அரிது.
- காந்தியின் அகிம்சை உள்ளிட்ட சில கருத்தாக்கங்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனரே தவிர, காந்தியின் சுதந்திர வேட்கையை யாரும் எதிர்க்கவில்லை.
- ஏனென்றால் காந்தியை தேசத்தந்தை என கூறியவர் சுபாஷ் சந்திர போஸ், சில கருத்து வேறுபாடு காரணமாக காந்தியை எதிர்த்த பெரியார், அவர் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றார், மேலும் இந்தியாவை காந்தி தேசம் என அழைக்க வேண்டும் என பெரியார் கூறினார். பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் காந்தியின் அகிம்சைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்றால் மிகையாகாது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion