மின்சாரம் வாங்க விற்க தமிழ்நாட்டிற்கு தடை விதித்த மத்திய அரசு… மின்தடை ஏற்படுமா?
இதில் தெலங்கானா மாநிலம் அதிகபட்சமாக ரூ.1,380 கோடி நிலுவை வைத்துள்ளது. தமிழ்நாடு ரூ.926.16 கோடி நிலுவை வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மின்பகிர்வுக்கு தடை
மின்கட்டமைப்பை நிர்வகிக்கும் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் முதல்முறையாக 13 மாநிலத்துக்கு எதிராக இந்த தடையை தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மின் பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 13 மாநிலங்களும் சுமார் ஐந்தாயிரம் கோடி அளவில் மின்பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு, தனியார் நிறுவனங்களிடம் வாங்குவது தவிர, மின் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கி தான், தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையை மின்வாரியம் சமாளித்து வருகிறது!(2/4)
— Dr S RAMADOSS (@drramadoss) August 19, 2022
மாநிலம் வாரியாக
இதில் தெலங்கானா மாநிலம் அதிகபட்சமாக ரூ.1,380 கோடி நிலுவை வைத்துள்ளது. தமிழ்நாடு ரூ.926.16 கோடி நிலுவை வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் 355.2 கோடியும், மகாராஷ்டிராவில் 381.66 கோடியும், மத்திய பிரதேசத்தில் 229.11 கோடியும், ராஜஸ்தானில் 500.66 கோடியும், ஆந்திராவில் 412.69 கோடியும், ஜார்கண்டில் 214.47 கோடியும் கடன் உள்ளதாக தெரிவிக்காட்டுள்ளது.
விதி என்ன சொல்கிறது?
LPS விதிகளின்படி, ஏழு மாதங்களுக்கு மேலாக ஜென்கோஸுக்கு டிஸ்காம்கள் நிலுவை தொகையை செலுத்தாமல் இருந்தால், அவை மின்சார வர்த்தகத்தில் ஈடுபட முடியாது என்பது விதி. இந்தச் செய்தி, இந்திய எரிசக்தி பரிவர்த்தனையை (IEX) அழுத்தத்திற்கு உள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது. அதுவே இந்த நடவடிக்கைக்கு காரணம்.
மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை மின்வாரியம் உடனடியாக செலுத்தி தடையை விலக்கச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மின் தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும் உறுதி செய்ய வேண்டும்!(4/4)@CMOTamilnadu
— Dr S RAMADOSS (@drramadoss) August 19, 2022
ராமதாஸ் ட்வீட்
இதுகுறித்து மருத்துவர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அவரது பதிவில், " இது பெரும் பின்னடைவு ஆகும். தமிழகத்தின் தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி குறையத் தொடங்கியுள்ள நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். பொதுமக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, தொழில் உற்பத்தி மற்றும் வணிகத்தையும் இது பாதிக்கக் கூடும். மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை மின்வாரியம் உடனடியாக செலுத்தி தடையை விலக்கச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மின் தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்