மேலும் அறிய

TN Headlines: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்தது என்ன? முக்கிய செய்திகளின் ரவுண்டப் இதோ!

Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் ஜூலை 14-ம் தேதி காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

டிரோன் மூலம் சிறுத்தையை தேடும் பணி தீவிரம் - பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர் கோம்பைக்காடு பகுதியில் 13 இடங்களில் கேமரா மற்றும் கூண்டுகளை அமைத்துள்ளனர். சிறுத்தை மீண்டும் வேட்டைக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினர் குழுக்கள் அமைத்து டிரோன் கேமராவை பறக்கவிட்டு வனப்பகுதியில் சிறுத்தை பதுங்கி உள்ளதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக சிறுத்தையின் கால் தடத்தை வைத்து வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகின்றனர். 

மாறும் தாம்பரம் ரயில் நிலையம்.. ரூ.1000 கோடி ப்ராஜெக்ட் .. உலகத்தரத்தில் மாற்ற திட்டம்..!

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் வழித்தடத்தில் முக்கிய பகுதியாக தாம்பரம் உள்ளது. இதேபோன்று தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை ஏராளமான மின்சார ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்தில் ஏற்கனவே, எஸ்கலேட்டர், லிப்ட், நடைமேடை, ரயில்வே காவல் நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.இந்தநிலையில் தற்பொழுது தாம்பரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெற்கு ரயில்வே சுமார் 1000 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ரவுடி திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்தது ஏன்? போலீசார் தந்த விளக்கம்

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது வீட்டின் முன்பு சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் 8 பேர் சரண் அடைந்தனர்.  ஒருவரான ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்டரில் இன்று காலை சுட்டுக்கொன்றனர்கொலையாளிகளில் ஒருவரான திருவேங்கடத்தை விசாரணைக்காக இன்று காலை புழல் நோக்கி அழைத்துச் சென்றனர். அப்போது, மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே செல்லும்போது திருவேங்கடம் தப்பி ஓடியுள்ளார். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை் தேடும்போது, புழல் வெஜிடேரியன் நகரில் உள்ள தகர கொட்டகையில் திருவேங்கடம் பதுங்கினார் என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளார்.

கீழடி அகழாய்வில் தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய்  கண்டெடுப்பு.. விவரம்..

தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கிடைத்திருப்பதன் வாயிலாக கீழடியில் மேம்பட்ட தமிழ்ச் சமூகம் வாழ்ந்தற்கானச் சான்றாகக் கருதப்படுகிறது கீழடியில் 120 செ.மீ. ஆழத்தில்  தந்தத்தினாலான ஆட்டக்காய் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. உருளைவடிவிலான உடற்பகுதியை உடைய இந்த ஆட்டக்காய் சற்று அரைக்கோளவடிவ தலைப்பகுதியையும் தட்டையான அடிப்பகுதியையும் கொண்டுள்ளது. சிறிய அளவிலான இந்த ஆட்டக்காய் 1.3 செ.மீ உயரமும் 1.5 செ.மீ விட்டம் கொண்ட தலைப்பகுதியையும் 1.3 செ.மீ விட்டம் கொண்ட  அடிப்பகுதியையும் கொண்டுள்ளது.

 உயரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 4,013 கன அடியாக அதிகரிப்பு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 3,087 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 3,191 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 4,013 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget