மேலும் அறிய
Advertisement
News Headlines: 1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு...ஐ.நா பருவநிலை மாநாடு... மேலும் சில முக்கியச் செய்திகள்
Headlines Today, 1st Nov: இன்றைய தினத்தில் அறியவேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.
- தமிழ்நாடு தினம் ஜுலை மாதம் 18-ஆம் தேதி கொண்டாடப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது என்றும், நவம்பர் ஒன்றாம் தேதியே கொண்டாடப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சியை சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார்.
- சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் அறுவை சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார்.
- முல்லைப்பெரியாறு அணையில் மத்திய தொழில்படை பாதுகாப்பு அளிக்கக்கோரி நவ-12ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார் .
- தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. இருப்பினும், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமல்ல என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
- சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான நேற்று சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு எதிரே அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி மலர் மரியாதை செலுத்தினார்.
இந்தியா:
- உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சக்ரதாவில் நடந்த சாலை விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்தனர்.
- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாளில் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
- உடல்நலக்குறைவு காரணமாக தில்லி எயிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் நேற்று வீடு திரும்பினார்.
- டெல்லியில் அனைத்து வகுப்புகளுக்கும் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.
விளையாட்டு:
நேற்று நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. நமீபியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், 62 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகம்:
- இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வந்த ஜி-20 உச்சிமாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டின் நிறைவாக ரோம் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டடது.
- பருவநிலை மாற்றத்துக்கான ஐ.நா அமைப்பின் (யுஎன்எப்சிசிசி) 26வது சிஓபி-26 மாநாடு இன்று தொடங்குகிறது. நவம்பர் 1ம் தேதி முதல் 2ம் தேதி வரை நடைபெறும் சிஓபி-26 உலக தலைவர்கள் உச்சிமாநாட்டில் 120 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion