மேலும் அறிய

IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி

India vs Australia 1st Test Highlights: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில், 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

India vs Australia 1st Test Highlights: பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி அபார வெற்றி

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ரன்கள் அடிப்படையில் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும். 534 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, வெறும் 238 ரன்களை சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது. பெர்த்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தில் இதுவரை தோல்வியே கண்டதில்லை என்ற சாதனை பயணத்தையும் ஆஸ்திரேலியா இழந்துள்ளது.  இந்திய அணி சார்பில், கேப்டன் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  இரண்டு இன்னிங்ஸில் சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்டன் பும்ரா, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது, கேப்டன் ரோகித் சர்மா இல்லாதது ஆகியவை இந்திய அணிக்கு பெரும் பலவீனமாக கருதப்பட்டது. ஆனால், அதை அனைத்தையும் கடந்து, முதல் போட்டியில் வெற்றி வாகை சூடியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, வரும் 6ம் தேதி அடிலெட் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக தொடங்க உள்ளது.

முதல் இன்னிங்ஸ் சுருக்கம்:

போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், எதிர்பார்த்தபடி ரன்களை சேர்க்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஓரளவிற்கு தாக்குப்பிடித்த நிதிஷ்குமார் ரெட்டி 41 ரன்களும், பண்ட் 37 ரன்களும் சேர்த்தனர். இதனால், இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கியபோது, இந்திய அணி பந்துவீச்சாளர்கள் அதிரடி காட்டினனர். குறிப்பாக கேப்டன் பும்ரா அட்டகாசமாக பந்துவீசினார். இதனால், ரன் எடுக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம், 104 ரன்களுக்கு அந்த அணி ஆல்-அவுட் ஆனது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், ராணா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

2வது இன்னிங்ஸ் சுருக்கம்:

46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஷ்வால் மற்றும் கே.எல். ராகுல், ஆஸ்திரேலியா பந்துவீச்சை நையப்புடைத்தனர். இருவரும் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் எதிரணி திணற, ஜெய்ஷ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஜோடி 200 ரன்களை சேர்த்தது. சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராகுல் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனாலும், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஜெய்ஷ்வால் 161 ரன்கள் விளாசி பல சாதனைகளை முறியடித்தார். அவரை தொடர்ந்து வந்த கோலி அதிரடியாக ஆடி சதம் விளாசினார். இதன் மூலம், 487 ரன்கள் குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது.  இதையடுத்து 534 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா, 238 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக அந்த அணியில் டிராவிஸ் ஹெட், 89 ரன்களை சேர்த்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget