ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தின் போது, சட்டத்திற்கு உட்பட்டு கழக ஆட்சி செயல்பட்ட போதும், "மனித உரிமை" என்ற சொல்லையே தாம் தான் கண்டுபிடித்தாற்போல் வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய மு.க.ஸ்டாலின்
![ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ் Edappadi palanisamy questioned MK Stalin at pudukottai police station murder case ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/d0c7eb4716a08118655d731766fdce8c1732521308429333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திமுக ஆட்சியில் தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் முதல்வர் ஸ்டாலின் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “புதுக்கோட்டையில் காவல்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
திமுக ஆட்சியில் ஒருபுறம் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கைக் காக்கவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில்லை; மறுபுறம் காவல் நிலைய மரணங்கள் என்பதும் தொடர்கதையாகி உள்ளது.
சென்னையில் நடந்த விக்னேஷ் (எ) விக்னா காவல் நிலைய மரணத்தின் போது நான் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய போதே, பச்சைப்பொய் பேசியவர் தான் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
காவல் நிலைய மரணங்கள் தொடர்வதும், அதனை திமுக அரசு அதன் அதிகாரத்தைக் கொண்டு மூடி மறைக்க முயல்வதும் கண்டனத்திற்குரியது.
புதுக்கோட்டையில் காவல்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) November 25, 2024
திமுக ஆட்சியில் ஒருபுறம் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கைக் காக்கவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில்லை; மறுபுறம் காவல் நிலைய…
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தின் போது, சட்டத்திற்கு உட்பட்டு கழக ஆட்சி செயல்பட்ட போதும், "மனித உரிமை" என்ற சொல்லையே தாம் தான் கண்டுபிடித்தாற்போல் வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய மு.க.ஸ்டாலின், இன்று அவரது ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இளைஞர்கள் போதை ஊசி பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசாஅர் 13 இளைஞர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை பல இடங்களுக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது. அதில் சாந்தநாதபுரம் 7ஆம் வீதியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது லாக் அப் மரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து நீதிபதி விஜயபாரதி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், விக்னேஷுக்கு ஏற்கெனவே மஞ்சள் காமாலை இருந்ததாகவும் அதனால் அவர் மயக்கம் போட்டு இறந்தார் எனவும் தெரிவித்துள்ளது. இது புதுக்கோட்டையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)