Breaking | 27 சதவித இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி- பிரதமருக்கு ஒபிஎஸ் கடிதம்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
அசாம், மிசோரம் மாநிலங்களுக்கிடையேயான எல்லை பகுதிகளில் ஏற்பட்ட சண்டையில் அசாம் மாநில காவலர்கள் 5 பேர் மிசோராம் காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து, மிசோரம் மாநிலத்துக்கு யாரும் செல்ல வேண்டாம் என அசாம் மாநில அரசு அறிவுரித்தியது. இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா மீது மிசோரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
27 சதவித இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி- பிரதமருக்கு ஒபிஎஸ் கடிதம்
27 சதவித இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து பிரதமருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
10% EWS Reservation: முற்பட்டோருக்கு 10% இட ஒதுக்கீடு ஒரு சமூக அநீதி - எம்.எச்.ஜவாஹிருல்லா
முற்பட்டோருக்கு 10% இட ஒதுக்கீடு ஒரு சமூக அநீதி இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதாரநிலை ஒருபோதும் அளவுகோலாக இருக்க முடியாது.ஒன்றிய அரசு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
நாட்டில் 92.8 சதவீத ரேஷன் அட்டைகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு
நாட்டில் 92.8 சதவீத ரேஷன் அட்டைகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக, மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் 21.91 (92.8%) கோடி ரேசன் அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணியை முடித்து விட்டன. இதில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 70.94 கோடி (90 சதவீதம்) பயனாளிகள் உள்ளனர். நாட்டில் உள்ள சுமார் 4.98 லட்சம் நியாய விலை கடைகளில் (92.7 சதவீதம்), கடந்த 23ம் தேதி வரை, மின்னணு-விற்பனை இயந்திரங்கள் உள்ளன.
பொது விநியோக திட்டத்தின் கீழ், நாட்டில் 5.38 லட்சம் நியாய விலை கடைகள் செயல்பாட்டில் உள்ளன. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக பீகாரில் அதிக அளவிலான நியாய விலை கடைகள் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 80,493, மகாராஷ்டிராவில் 52,532, பீகாரில் 47,032, தமிழகத்தில் 34,776 நியாய விலைக் கடைகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
அரபிக் கடலில் புயல்கள் உருவாவது சமீபத்தில் அதிகரிக்கிறது - மத்திய அரசு
கடல் வெப்பம் அதிகரிப்பு காரணமாக, அரபிக் கடலில் புயல்கள் உருவாவது சமீபத்தில் அதிகரிக்கிறது. குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கும், மேற்கு கடேலாரத்தில் உள்ள டாமன், டையூ தத்ரா மற்றும் நகர் ஹவேலி, லட்சத்தீவு போன்ற யூனியன் பிரதேசங்களுக்கு, மேம்படுத்தப்பட்ட புயல் எச்சரிக்கை மையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் முன்னெச்சரிக்கைகள் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு புயல் பாதிப்பு இல்லாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜித்தேந்திர சிங் மக்களவையில் தெரிவித்தார்.
India Enters Finals: ஒலிம்பிக் வட்டு எறிதலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்திய கமல்பிரீத் கவுர் !
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தடகளத்தில் இன்று மகளிர் வட்டு எறிதலுக்கான தகுதிச் சுற்று போட்டியில் கமல்பிரீத் கவுர் வெற்றி பெற்றார்.
இவர் தன்னுடைய முதல் வாய்ப்பில் 60.29 மீட்டர் தூரம் வீசினா. அதன்பின்னர் கிடைத்த இரண்டாவது வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட கமல்பிரீத் கவுர் 63.97 மீட்டர் வீசி அசத்தினார். தன்னுடைய மூன்றாவது வாய்ப்பில் 64.00 மீட்டர் தூரம் வீசி நேரடியாக இறுதிப் போட்டிக்குதகுதிப் பெற்று அசத்தினார். இறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது