Breaking Live: உத்தரகாண்ட் புதிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
உத்தரகாண்ட் மாநில பாஜக சட்டமன்றக்கட்சி தலைவராக புஷ்கர் சிங் தாமியை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். தீரத்சிங் ராவத் ராஜினாமா செய்த நிலையில் டேராடூனில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்று 6 மாதத்தில் எம்ஏவாக தேர்வாக முடியாத சூழல் ஏற்பட்டதால் தீரத் சிங் ராஜினாமா செய்தார்.
உத்தரகாண்ட் புதிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி
உத்தரகாண்ட் மாநில பாஜக சட்டமன்றக்கட்சி தலைவராக புஷ்கர் சிங் தாமியை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். தீரத்சிங் ராவத் ராஜினாமா செய்த நிலையில் டேராடூனில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்று 6 மாதத்தில் எம்ஏவாக தேர்வாக முடியாத சூழல் ஏற்பட்டதால் தீரத் சிங் ராஜினாமா செய்தார்.
Pune Districts sero-survey: 70% குழந்தைகள் மறைமுகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் - ஷாக் தகவல்
புனே மாவட்டத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட SARS-CoV2 IgG ஆன்டிபாடிகளைக் கண்டுபிடிப்பதற்கான தமிழ்நாடு சீரோசர்வேலன்ஸ் ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், புனே மாவட்டத்தில் 6- 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
தருமபுரி கொரோனா தடுப்பூசி நிலவரம்
தருமபுரி மாவட்டத்திற்கு தற்போது வரை கோவிட் தடுப்பூசிகள் வரப்பெற்ற விவரம் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
18- 44வயதுக்குட்பட்ட பயனாளிகளில் வெறும் எட்டு பேருக்கு மட்டுமே கோவிஷீல்டு இரண்டாம் தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் பாதிப்பு விகிதம் 13 சதவிகிதமாக குறைந்துள்ளது
கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு விகிதம் 13 சதவிகிதமாக குறைந்துள்ளது.
16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி உட்பட 16 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.