மேலும் அறிய

Highcourt On Domestic Violence : பெண்ணிடம் இதையெல்லாம் பறிப்பது குடும்ப வன்முறைதான் - உயர்நீதிமன்றம் அதிரடி

பெண்ணின் நிதி ஆதாரங்களை பறிப்பதும் குடும்ப வன்முறை மற்றும் பொருளாதாரா துஷ்பிரயோகம் தான், என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கணவனை இழந்த பெண்:

மேற்குவங்கத்தை சேர்ந்த நந்திதா சர்கார் என்பவரது கணவர் கடந்த 2010ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அடுத்த நாளே அவரிடமிருந்து சீதன பொருட்கள், விலையுயர்ந்த நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை, கணவர் வீட்டு தரப்பினர் பறித்துக் கொண்டுள்ளனர். அதோடு, வெத்து பத்திரங்களில் கையெழுத்திட்டு மகள் நந்திதாவை அழைத்து செல்லுங்கள் என அவரது பெற்றோரையும்,  சம்மந்தி வீட்டு தரப்பினர் வற்புறுத்தியுள்ளனர்.

நீதிமன்றங்களில் மாறுபட்ட தீர்ப்பு:

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹவுரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நந்திதா சர்க்கார் PWDV சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து, கணவர் வீட்டு தரப்பில் இருந்து தனக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட கோரினார்.  வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  நந்திதா சர்காருக்கு இழப்பீடு மற்றும் பிற நிவாரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அதை எதிர்த்து, அந்த பெண்ணின் மாமியர் வீட்டு தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.

உயர்நீதிமன்றத்தை நாடிய பெண்:

இதையடுத்து நந்திதா சர்கார் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனு நீதிபதி சுபேந்து சமந்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தான் கணவருடன் வசித்து வந்த வீட்டிலிருந்த பொருட்கள், தான் அணிந்திருந்த ஆபரணங்கள் என அனைத்தும், மாமியர் வீட்டு தரப்பினர் பறித்துக்கொண்டனர். பல முறை கேட்டும் அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை.  கணவர் இறப்புச் சான்றிதழின் நகலை கூட மாமியார் தன்னிடம் ஒப்படைக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார்.

கணவர் வீட்டு தரப்பு வாதம்:

அதேசமயம்,  PWDV சட்டத்தின் விதிகளின்படி, மருமகளுக்கு அவரது மாமனாரிடம் இருந்து எந்தவிதமான பராமரிப்பு வழங்க கோரவும்  உரிமை இல்லை என, கணவர் வீட்டு தரப்பினர் வாதிட்டனர். கணவரின் மீதுள்ள சொத்துக்கள் மீது மட்டுமே, இந்து திருமணசட்டப்படி ஒரு விதவைப் பெண்ணால் உரிமை கோர முடியும் எனவும், மாமியர்-மாமனாரின் சொத்துக்கள் மீது உரிமை கோர முடியாது என்றும் வலியுறுத்தினர்.

நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு பெண்ணின் பொருளாதார மற்றும் நிதி ஆதாரங்களை பறிக்கும் எந்தவொரு செயலும், குடும்ப வன்முறையாகவே கருதப்படும். அந்த வகையில் நந்திதா சர்கார் தொடர்ந்த வழக்கிலும் அவருக்கான நிதி ஆதாரங்கள் நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்துள்ளது. எனவே, இதுவும் பொருளாதார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப வன்முறைக்கு சமம் தான் என வலியுறுத்தினார். தொடர்ந்து, மனுதாரருக்கு நிவாரணம் வழங்க வேண்டாம் என, செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த உத்தரவையும் ரத்து செய்து நீதிபதி சுபேந்து சமந்தா உத்தரவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget