Taj Mahal Case: “விட்டா நீதிபதிகளோட அறைகளையும் திறக்க சொல்லுவீங்க” : தாஜ்மஹாலின் அறைகளை திறக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி
”நீதிபதிகளின் அறைகளை திறக்கக்கோரி வழக்கு தொடுத்தாலும் தொடுப்பீர்கள்” என தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளை திறக்க கோரிய வழக்கில் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்
![Taj Mahal Case: “விட்டா நீதிபதிகளோட அறைகளையும் திறக்க சொல்லுவீங்க” : தாஜ்மஹாலின் அறைகளை திறக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி Taj Mahal Case allahabad high court rejects petition seeking open 22 closed doors Taj Mahal Case: “விட்டா நீதிபதிகளோட அறைகளையும் திறக்க சொல்லுவீங்க” : தாஜ்மஹாலின் அறைகளை திறக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/16/e6e47ed9f2691504db9b06773f2d6336_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நீதிபதிகளின் அறைகளை திறக்க கோரி வழக்கு தொடுப்பீர்கள்- நீதிபதிகள் கண்டனம்
”நீதிபதிகளின் அறைகளை திறக்க கோரி வழக்கு தொடுத்தாலும் தொடுப்பீர்கள்” என தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளை திறக்க கோரிய வழக்கில் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளில் இந்து தெய்வங்கள் இருப்பதாகவும், அதை திறக்க உத்தரவிட வேண்டும் என பாஜக நிர்வாகி ரஜ்னீஷ் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் லக்னோ கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வழக்கு-விசாரணை:
தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளை திறக்க கோரிய வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை நீதிபதிகள் டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வு விசாரணை செய்தது.
மனுதாரர் தரப்பு:
மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அதில் தாஜ்மஹாலில் உள்ள 22 பூட்டிய அறைகளை திறக்க வேண்டும் என மனுதாரர் தெரிவித்தார். மேலும், அந்த அறைகளில் இருப்பது குறித்து நாட்டு மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என் ரஜ்னீஷ் சிங் தெரிவித்தார். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த அறைகளை பூட்டி உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் தெரிவித்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
நீதிபதிகள் தரப்பு:
மனுதாரர் தரப்புக்கு பதிலளித்து பேசிய நீதிபதிகள் தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டினாரா என்று சந்தேகிக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார். மேலும் எந்த அடிப்படையில் நீதிமன்றத்தை அணுகி உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர். நீதிபதிகளின் அறைகளை திறக்கக்கோரி வழக்கு தொடுத்தாலும் தொடுப்பீர்கள் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய விரும்பினால், எம்.ஏ போன்ற ஆய்வு படிப்புகளை படித்துவிட்டு, பின் ஆய்வு செய்ய வாருங்கள். அப்போது அனுமதி கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுங்கள் என நீதிபதி காட்டமாக பதிலளித்தார். இது போன்ற வழக்கு தொடுப்பதன் மூலம், பொது நல வழக்கு தொடரும் முறையை இழிவுபடுத்த வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)