மேலும் அறிய

"திறமைசாலிகள இழந்துட்டு இருக்கோம்" - நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்

கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் தொடர் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம். ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. 

மத்திய அரசு - நீதித்துறை இடையே உரசல்:

இதற்கிடையே, கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. 

இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில், கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் தொடர் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர்.

"திறமைசாலிகள இழந்துட்டு இருக்கோம்" 

இந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திறமையானவர்களை நீதித்துறை இழந்து வருவதாகவும் கடந்த 10 மாதங்களில், உயர் நீதிமன்றங்களுக்கு பரிந்துரைத்த 70 நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு நிலுவையில் வைத்திருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

"கொலீஜியம் பரிந்துரைகளின் மீது முடிவுகளை எடுக்காமல் மத்திய அரசு பல மாதங்களாக காலத் தாமதம் செய்து வருவதால் நீதிபதிகளாக பரிந்துரைக்கப்படுபவர்கள் தங்களின் முயற்சிகளை விட்டுவிடுகின்றனர். இதனால், நீதித்துறை திறமையானவர்களை இழுந்து வருகிறது" என நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதான்சு துலியா தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "பல திறமையான சட்ட வல்லுநர்கள் நீதிபதியாவதற்கு தங்களின் வழக்கறிஞர் பணியை தியாகம் செய்ய தயாராக உள்ளனர். ஆனால், அரசாங்கத்தின் பாகுபாட்டான செயலால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தெரியாத காரணங்களுக்காக ஒரு சிலருக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

"காலியாக உள்ள எழுபது பணியிடங்கள்"

நீதிபதியாக நினைக்கும் நபர்களின் எஎண்ணிக்கை குறைந்து வருகிறது. நாங்கள் முயற்சி செய்கிறோம். சிறந்த திறமைசாலிகளை பெற முயற்சிக்கிறோம். ஆனால், பாகுபாட்டால் நல்ல திறமையை நீதித்துறை இழந்துவிட்டது. அவர்கள் வெளியேறுகிறார்கள், பின்வாங்குகிறார்கள். நான் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், அவர்கள் விலகிய பிறகு நாங்கள் ஒன்று, இரண்டு நல்லவர்களை இழந்துவிட்டோம்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எழுபது பணியிடங்கள் காலியாக உள்ளன. உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகளைப் பெற்றவுடன், நீங்கள் சில அடிப்படைச் செயலை செய்து அதை உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு அனுப்ப வேண்டும். அதைக்கூட நீங்கள் செய்யவில்லை. அவர்களைப் பற்றிய உங்கள் பார்வை தெரிந்துவிட்டால் நாங்கள் [உச்ச நீதிமன்ற கொலீஜியம்] முடிவை எடுத்துவிடுவோம். நீங்கள் அதைச் செய்யவில்லை" என தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
Embed widget