மேலும் அறிய

ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. மேற்குவங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரபர நோட்டீஸ்!

மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீது பெண் தொடர்ந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கு சம்பந்தமாக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேற்குவங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஒப்பந்தப் பெண் பணியாளரே பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அமர்வில் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய நீதிபதிகளும் இடம்பெற்றனர்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்குவங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 361(2) கீழ் ஆளுநருக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, குடியரசு தலைவர் மீதோ, ஆளுநர் மீதோ அவரது பதவிக்காலத்தில் குற்ற வழக்குகள் தொடர முடியாது.

ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகார வரம்பு தொடர்பாகவும் உத்தரவில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. "சட்டப்பிரிவு 361(2)இன் அர்த்தம் தொடர்பாக இந்த மனு புது கேள்வியை எழுப்பியுள்ளது.  குறிப்பாக குற்றவியல் நடவடிக்கைகள் சட்டத்தின் நிர்வாக விதிகளின் அடிப்படையில் நிறுவப்பட்டதாகக் கருதப்படும்போது, இந்த கேள்வி எழுகிறது" என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் உதவியை நாடியுள்ளது உச்ச நீதிமன்றம். கடந்த ஏப்ரல் 24 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் தனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ஆளுநர் ஆனந்த போஸ் தன்னை அழைத்து ராஜ்பவனில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த பெண் மே மாதம் போலீசில் புகார் அளித்தார்.

ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் அளிப்பதை தடுக்கும் நோக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆளுநருக்கான சிறப்பு அதிகாரி நெருக்கடி தந்ததாகவும் அழுத்தம் தந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த அதிகாரிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால், அந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண், உச்ச நீதிமன்றத்தை நாடினார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், "விசாரணை தொடர்ந்து நடக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 361இன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையில்லா அதிகாரங்கள் காரணமாக தான் திக்கற்று இருப்பதாகவும் 361இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு என வழிகாட்டுதல்களை உருவாக்கி, எந்தளவுக்கு வரை அதிகாரங்களை பயன்படுத்தலாம் என்பதற்கு வரையறை வேண்டும் என மனுவில் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மக்களே கவனம்.. விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க கட்டுப்பாடு.. உயர் நீதிமன்றம் உத்தரவு!
மக்களே கவனம்.. விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க கட்டுப்பாடு.. உயர் நீதிமன்றம் உத்தரவு!
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு! ஒரே ஆண்டில் 11 ஆயிரம் பேருக்கு பாதிப்பு! 4 பேர் மரணம்!
தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு! ஒரே ஆண்டில் 11 ஆயிரம் பேருக்கு பாதிப்பு! 4 பேர் மரணம்!
TNPSC Group 1 Exam: டிஎன்பிஎஸ்சி 2024 குரூப் 1 முதன்மைத் தேர்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு
TNPSC Group 1 Exam: டிஎன்பிஎஸ்சி 2024 குரூப் 1 முதன்மைத் தேர்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு
Breaking News LIVE:  தமிழ்நாட்டில்  இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

JP Nadda on Kerala issue : ”யார காப்பாத்துறீங்க பினராயி?”அடுத்தது உங்க கட்சி தான்!பகீர் கிளப்பிய நட்டாDuraimurugan Singapore Trip : ”நீ பார்த்துக்கோ உதய்”சிங்கப்பூர் பறந்த துரைமுருகன்! காரணம் என்ன?Chinmayi on Jiiva : ஜீவா சொன்ன வார்த்தை! கடுப்பான சின்மயி! நடந்தது என்ன?Mammootty on hema committee report | சிக்கலில் மோகன்லால்.. மம்முட்டிக்கு SUPPORT! பரபரக்கும் கேரளா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மக்களே கவனம்.. விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க கட்டுப்பாடு.. உயர் நீதிமன்றம் உத்தரவு!
மக்களே கவனம்.. விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க கட்டுப்பாடு.. உயர் நீதிமன்றம் உத்தரவு!
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு! ஒரே ஆண்டில் 11 ஆயிரம் பேருக்கு பாதிப்பு! 4 பேர் மரணம்!
தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு! ஒரே ஆண்டில் 11 ஆயிரம் பேருக்கு பாதிப்பு! 4 பேர் மரணம்!
TNPSC Group 1 Exam: டிஎன்பிஎஸ்சி 2024 குரூப் 1 முதன்மைத் தேர்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு
TNPSC Group 1 Exam: டிஎன்பிஎஸ்சி 2024 குரூப் 1 முதன்மைத் தேர்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு
Breaking News LIVE:  தமிழ்நாட்டில்  இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு!
Minister Anbil Mahesh: கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடம் நிதி பெறமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
Minister Anbil Mahesh: கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடம் நிதி பெறமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
Watch video : நடுவானில் பறக்கும் 'தி கோட்' கொடி! கனடாவை கலக்கும் தளபதி விஜய்...
நடுவானில் பறக்கும் 'தி கோட்' கொடி! கனடாவை கலக்கும் தளபதி விஜய்...
EPS: வெளிநாட்டு போட்டோஷூட்டிலும், ஆடம்பர கார் ரேஸிலுமே கவனம்; அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் தேவை; ஈபிஎஸ் கண்டனம்
EPS: வெளிநாட்டு போட்டோஷூட்டிலும், ஆடம்பர கார் ரேஸிலுமே கவனம்; அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் தேவை; ஈபிஎஸ் கண்டனம்
TN Govt AABC Scheme: ரூ.1.5 கோடி வரை மானியத்துடன் கடன் - அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம், பலன் யாருக்கு?
ரூ.1.5 கோடி வரை கடன், 6% வட்டி மானியம்:அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம், பலன் யாருக்கு?
Embed widget