மேலும் அறிய

முன்கூட்டியே கோடை விடுமுறை... பரிசீலிக்கும் மாநில அரசு... காத்திருக்கும் மாணவர்கள்..!

கடும் வெப்பம் காரணமாக, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, முதியவர்கள் மற்றும் சிறார்களை வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு நகரங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் பதிவானதால் வெப்ப அலை நாட்டை உலுக்கி வருகிறது. குறிப்பாக, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்கள் வெப்ப அலையின் தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

நாட்டை உலுக்கி வரும் வெப்ப அலை:

அடுத்த சில நாள்களுக்கு மேல்குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, பிகார் பாட்னாவில் அமைந்துள்ள பள்ளிகளின் நேரத்தை மாற்றி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில், வெப்பத்தின் அளவு இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் பதிவாகி வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதத்தின் மத்தியில் மகாராஷ்டிராவின் 10 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் 40 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, சந்திராபூரில் 43.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக, தெற்கு மும்பையில் 31.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

முன்கூட்டியே கோடை விடுமுறை:

மேற்கு வங்கத்தில் நிலவும் வெப்பச் சலனத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை ஏப்ரல் 18ஆம் தேதியே மூன்கூட்டியே அறிவிப்பதற்கு மாநில அரசு பரிசீலித்து வருகிறது. முன்னதாக, பள்ளிகளுக்கு மே 2ஆம் தேதி முதல் கோடை விடுமுறையை மாநில அரசு அறிவித்திருந்தது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

அதேபோல, மேற்கு வங்கத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட கல்வி நிலையங்கள் அடுத்த வாரத்திற்கு மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 12 முதல் 16 வரை, வெப்ப அலை வீசும் என அலிபூர் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்கத்தாவில் இன்று வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. சில தெற்கு வங்காள மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் எட்டியுள்ளது.

கிழக்கு மற்றும் மேற்கு பர்த்வானில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலையில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 22ம் தேதிக்கு முன் மழை பெய்யாது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடும் வெப்பம் காரணமாக, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, முதியவர்கள் மற்றும் சிறார்களை வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் வெளியே செல்லும் போது தலையை மறைக்க வேண்டும் அல்லது குடை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடலில் பிடிப்புகள் ஏதேனும் இருந்தாலோ, சுவாசிப்பதில் சிரமம் இருந்தாலோ மருத்துவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தெருக்களில் விற்கப்படும் மற்றும் மூடாமல் வைக்கப்படும் பழங்களை சாப்பிட வேண்டாம் என்று மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget