மேலும் அறிய

தெரு நாய்கள் கருணைக் கொலைக்கு அரசு அனுமதி! அதிர்ச்சி தரும் காரணம்

நோய் பாதித்த நாய் என்பதை கால்நடை மருத்துவர் உறுதிப்படுத்தி ஒப்புதல் வழங்கினால் மட்டுமே கருணைக்கொலை செய்யப்படும். அதற்கு சட்டம் உள்ளது.

கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் கடித்து குழந்தைகள் மரணமடையும் அதிர்ச்சி சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. கேரளாவில் இந்த ஆண்டு மட்டும் தெரு நாய்கள் கடித்து சிகிச்சைபெற்றவர்கள் இரண்டரை லட்சம்பேர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு மட்டும் குழந்தைகள் உள்பட சுமார் 21 பேர் நாய்க்கடியால் மரணமடைந்த சோகம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. இதையடுத்து நோய் பாதித்த தெரு நாய்கள் மற்றும் நோய்த் தொற்றுகளைப் பரப்பும் தெருநாய்களையும் கருணைக் கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது கேரள அரசு. இதுகுறித்து கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் சிஞ்சு ராணி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்ட விரோதமாக எதையும் செய்யவில்லை. சட்டத்தின் அடிப்படையிலேயே கருணைக்கொலை செய்யும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 


தெரு நாய்கள் கருணைக் கொலைக்கு அரசு அனுமதி! அதிர்ச்சி தரும் காரணம்

நோய் பாதித்த நாய் என்பதை கால்நடை மருத்துவர் உறுதிப்படுத்தி ஒப்புதல் வழங்கினால் மட்டுமே கருணைக்கொலை செய்யப்படும். அதற்கு சட்டம் உள்ளது. கருணைக்கொலை செய்வதற்கான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும். இதற்காக திருவனந்தபுரத்தில் உடனடியாக போர்ட்டபிள் ஏ.பி.சி மையம் திறக்கப்படும். கேரளா முழுவதும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒன்று என்ற அடிப்படையில் 152 போர்ட்டபிள் ஏ.பி.சி மையங்கள் திறக்கப்பட உள்ளன. 120 நாட்களில் அதற்கான இடம் தேர்வு செய்ய வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சையும் அளிக்கப்படும். நாய்களைப் பிடிப்பதற்காக பயிற்சிபெற்ற 158 பேர் உள்ளனர். மேலும் பலருக்கும் பயிற்சி அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். ஏ.பி.சி சட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என மீண்டும் மத்திய அரசை வலியுறுத்துவோம்.


தெரு நாய்கள் கருணைக் கொலைக்கு அரசு அனுமதி! அதிர்ச்சி தரும் காரணம்

வரும் ஆகஸ்ட் மாதம் தெருச்நாய்களுக்கு தடுப்பூசி போடப்படும். செப்டம்பர் மாதம் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கும், லைசென்ஸ் எடுப்பதற்கும் முகாம்கள் நடத்தப்படும். இப்போது பலரும் லைசென்ஸ் எடுத்துள்ளனர். தொடர்ந்து லைசென்ஸ் எடுப்பதற்கான முகாம்கள் நடத்தப்படும்.  வளர்ப்பு நாய்களுக்கு `எலக்ட்ரானிக் சிப்' பொருத்தப்படும். அதன்மூலம் வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்களின் விபரங்களும், தடுப்பூசிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் போடப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க முடியும். நோய் பாதித்த தெரு நாய்களை கருணைக் கொலை செய்வதற்காக அமைக்கப்படும் போர்ட்டபிள் ஏ.பி.சி மையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகளுக்கான ஏ.பி.சி சட்டத்தில் மேலும் தளர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு மீண்டும் வேண்டுகோள் வைக்க உள்ளோம்" என்றார்.

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget