மேலும் அறிய

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்

BJP Rajyasabha: கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில், பாஜக தனிப்பெரும்பான்மையை எட்ட உள்ளது.

BJP Rajyasabha: மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை எட்டுவதன் மூலம், அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை எளிதில் நிறைவேற்ற முடியும்.

40 ஆண்டுகளில் முதல்முறை..

நாடாளுமன்றத்தில் எந்தவொரு அரசிலமைப்பு  சட்ட திருத்த மசோதாவையும் நிறைவேற்ற, மாநிலங்களவை மற்றும் மக்களவை என  என இரண்டிலும் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது அவசியம். குறிப்பாக அவையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் வாக்குகளை பெற வேண்டும். ஆனால், கடந்த 40 ஆண்டுகளில் எந்தவொரு கட்சியாலும் மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மையை கூட எட்ட முடியவில்லை. கடைசியாக 1986ம் ஆண்டில் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, காங்கிரஸ் அந்த அந்தஸ்தை பெற்றிருந்தது. அதன் பிறகு தற்போது முதல்முறையாக தனிப்பெரும்பான்மை பெறும் கட்சி என்ற நிலையை பாஜக நெருங்கியுள்ளது.

மே. வங்கத்திலிருந்து 3 எம்.பிக்கள்..

மேற்குவங்கத்தில் பாஜக பெற்ற வரலாறு காணாத வெற்றியை தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களும் புதிய ஆளுங்கட்சியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் மம்தா பானர்ஜியால் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்ட சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் மற்றும் பிரகாஷ் பார் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர். உடனடியகா அவர்கள் வேட்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். அந்த மூவரின் வெற்றியும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனால் ஏற்கனவே மாநிலங்களவையில் 114 ஆக உள்ள பாஜகவின் மேலும் 117 ஆக உயரக்கூடும். இதனால் தனிப்பெரும்பான்மைக்கான எண்ணிக்கைக்கு வெறும் இடங்கள் மட்டுமே கூடுதலாக தேவைப்படும். இது மாநிலங்களவையில் அக்கட்சி பெரும் இதுவரை கண்டிராத அதிகபட்சமாகும். அதேநேரம் பாஜக கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரிக்கும்.

மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள்:

மாநிலங்களவையில் அரசியலமைப்பு திருத்த சட்டமசோதா நிறைவேற்றப்பட, வாக்கெடுப்பின்போது,அவையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரவளிக்க வேண்டும். அந்த வகையில் மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 166 பேர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இந்த நிலைக்கு பாஜகவிற்கு இன்னும் கூடுதலாக 14 பேரின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. இதற்காக தான் திமுக உள்ளிட்ட பல பிராந்திய கட்சிகளின் ஆதரவை மத்திய அரசு நாடி வருகிறதாம். குறிப்பாக ஆதரவாக வாக்களிக்காவிட்டாலும், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகி இருந்தாலே போதும் எனவும் வலியுறுத்தி வருகிறதாம்.

இதையும் படியுங்கள்: வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்

திமுகவின் நிலைப்பாடு என்ன?

கீழ்குறிப்பிடப்பட்டுள்ள கட்சிகளின் நிலைப்பாட்டின் முடிவிலேயே நடப்பாண்டு மழைக்கால கூட்டத்தொடரில், பல முக்கிய அரசியலமைப்பு திருத்தச் சட்ட மசோதாக்களின் வெற்றி தோல்விகள் அமையுமென கூறப்படுகிறது.

  • தமிழக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக - 8 எம்.பிக்கள்
  • ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங் - 4 எம்.பிக்கள்
  • ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் - 5 எம்.பிக்கள்
  • சுயேட்ச்சை எம்.பி., பரிமல் நத்வானி
  • சரத் பவார் கட்சியின் ஒரு எம்.பி.,

மத்திய அரசு கொண்டுவரப்போகும் மசோதாக்கள் என்ன?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜுலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு அமலாக்கம் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டுகிறது. முன்னதாக தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் வீழ்த்தப்பட்டதற்கு திமுக முக்கிய பங்கு வகித்தது. ஆனால், தற்போது ஆட்சியை இழந்ததோடு, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தும் விலகியுள்ளதால், ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget