PM Modi Wish : "உங்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்" - ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
"இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், உலகளாவிய பிரச்சினைகளில் நெருக்கமாக இணைந்து பணியாற்றவும், ரோட் மேப் 2030ஐ செயல்படுத்தவும் நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்"
பிரிட்டன் பிரதமராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இணைந்து இயங்க அழைப்பு விடுத்து, இணைக்கும் பாலமாக உள்ள இங்கிலாந்து வாழ் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
லிஸ் ட்ரஸ் ராஜினாமா
42 வயதாகும், பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்க உள்ள ரிஷி சுனக் கடந்த 1980 ஆம் ஆண்டு மே 12ல் பிரிட்டன் சவுதாம்ப்டன் நகரில் பிறந்தார். இவரது தந்தை யாஷ்வீரின் தந்தை வழி தாத்தாவும் பாட்டியும் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் 1960ல் கென்யாவுக்கு குடிபெயர்ந்தனர். இந்த குடும்பத்தில் இருந்து வந்த அவர் தற்போது பிரதமர் ஆகி உள்ளார்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே பிரிட்டன் அரசியலில் குழப்பமான சூழல் ஏற்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கை மீறி பார்ட்டி நடத்தியது தொடங்கி ஊழல் புகார் வரை பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனை சுழன்று அடித்தது. பிரச்சனைகளை தொடர்ந்து அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள் ராஜினாமா செய்ய துவங்க, அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் சேர்ந்த ரிஷி சுனக் உள்ளிட்டவர்கள் கூட ராஜினாமா செய்தனர். வேறு வழியின்றி போரிஸ் ஜான்சனும் ராஜினாமா செய்தார். அதன்பிறகு புதிய பிரதமருக்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற, இறுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் வென்று பிரதமரானார்.
பிரதமரான ரிஷி சுனக்
அவரது புதிய அமைச்சரவை தாக்கல் செய்த பட்ஜெட் காரணமாக பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. இதையடுத்து லிஸ் ட்ரஸ் பதவியேற்ற 45 நாட்களில் ராஜினாமா செய்த நிலையில், வரும் 28 ம் தேதிக்குள் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன், மற்றும் பென்னி மோர்டான்ட் ஆகியோர் போட்டியிடலாம் என கூறப்பட்ட நிலையில், போரிஸ் ஜான்சன், பென்னி மோர்டான்ட் ஆகியோர் விலகினர். தனித்து களமிறங்கிய பிரிட்டன் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக தேர்வாவது உறுதியான நிலையில், ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக முறைப்படி பதவியேற்றார்.
Warmest congratulations @RishiSunak! As you become UK PM, I look forward to working closely together on global issues, and implementing Roadmap 2030. Special Diwali wishes to the 'living bridge' of UK Indians, as we transform our historic ties into a modern partnership.
— Narendra Modi (@narendramodi) October 24, 2022
மோடி வாழ்த்து
ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்ற நிலையில், ட்விட்டரில் ஒரு வாழ்த்துச் செய்தியில், மோடி தனது சிறப்பு தீபாவளி வாழ்த்துக்களை, இங்கிலாந்து வாழ் இந்தியர்களுக்கு தெரிவித்தார். “மிகவும் அன்பான வாழ்த்துக்கள் ரிஷி சுனக்! இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், உலகளாவிய பிரச்சினைகளில் நெருக்கமாக இணைந்து பணியாற்றவும், ரோட் மேப் 2030ஐ செயல்படுத்தவும் நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இரு நாட்டின் இடையே உள்ள வரலாற்று உறவை, நவீன கூட்டாண்மையாக மாற்றும் வகையில், ‘வாழும் பாலமாக’ உள்ள இங்கிலாந்து வாழ் இந்தியர்களுக்கு தீபாவளி சிறப்பு வாழ்த்துக்கள்” என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.
First Kamala Harris, now Rishi Sunak
— P. Chidambaram (@PChidambaram_IN) October 24, 2022
The people of the U.S. and the U.K have embraced the non-majority citizens of their countries and elected them to high office in government
I think there is a lesson to learned by India and the parties that practise majoritarianism
ப.சி. ட்வீட்
இதனிடையே முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். "முதலில் கமலா ஹாரிஸ், இப்போது ரிஷி சுனக் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்கள் தங்கள் நாடுகளில் பெரும்பான்மை இல்லாத குடிமக்களை அரவணைத்து அரசாங்கத்தில் உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தியாவும் பெரும்பான்மைவாதத்தை கடைப்பிடிக்கும் கட்சிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதில் இருப்பதாக நான் நினைக்கிறேன்", என்றார். மேலும் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியர்கள் உலகம் முழுவதும் தங்கள் அடையாளத்தை பதித்துள்ளனர். இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்கும் திரு ரிஷி சுனக் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நாட்டை வெற்றிகரமாக வழிநடத்த அவருக்கு ஞானமும் வலிமையும் கிடைக்க வாழ்த்துகிறேன்", என்று எழுதியுள்ளார்.
Great News. Indians setting their mark all over the globe.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 24, 2022
My best wishes to Mr @RishiSunak on becoming the Prime Minister of the United Kingdom.
Wishing him wisdom and strength to lead the country successfully. https://t.co/GcbzGWbJcR