மேலும் அறிய

”துணையை தேர்வு செய்வதற்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்.. இதற்கு இடமில்லை..” : டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 21இன் ஒரு அங்கமாகவே திருமணத்தில் இணையரை தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இருக்கிறது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இணையரை தேர்வு செய்வதற்கான தனி மனித சுதந்திரத்தில் மத நம்பிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தாது என டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 21இன் ஒரு அங்கமாகவே திருமணத்தில் இணையரை தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இருக்கிறது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம், தனது விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து வைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர்களுக்கு பிணை வழங்கிய உத்தரவில்தான் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், தனது குடும்ப உறுப்பினர்கள் தம்பதியை கடத்தி சென்றதாக புகார் அளித்துள்ளார். 

கடத்தி சென்று தங்களை தாக்கியதாகவும் கோடாரியை வைத்து  அந்தரங்க உறுப்பு பகுதிகளை அகற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். கத்தியால் குத்தப்பட்டு காயம் ஏற்பட்ட நிலையில், அவரின் கணவர் சாக்கடையில் தூக்கி எறியப்பட்டுள்ளார். பின்னர், கணவரின் சகோதரர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இந்திய தண்டனை சட்டம் 356, 367, 368, 326, 307, 506, 120B மற்றும் 34 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனூப் குமார் மெந்திரட்டா, "தம்பதிகள் தங்கள் சொந்த விருப்பப்படி சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளும் சந்தர்ப்பங்களில், காவல்துறை விரைவாகவும் கவனமாகவும் செயல்படும் என்று நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.

பிறரிடமிருந்து பாதுகாப்பு குறித்த கவலைகள் இருந்தால், அத்தகைய தம்பதிகளின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும். திருமண நிச்சயதார்த்தம் முடிந்து இருவரும் டெல்லி திரும்பியபோது, ​​மனைவியின் குடும்பத்தினர் ஆத்திரமடைந்து கணவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக அரசுத் தரப்பு கூறுகிறது.

கணவர் டிசம்பர் 22, 2021 அன்று மாலை காவல் நிலையத்தை அணுகி, பாதுகாப்பு வழங்குவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். எனினும், தம்பதியினர் போலிஸ் நிலையத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ​​மனைவியின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களை கடத்திச் சென்று அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.

மனைவியின் பாட்டி மற்ற குடும்ப உறுப்பினர்களை ஏவி, புகார்தாரரின் அந்தரங்க உறுப்பை வெட்டும்படி கூறியுள்ளார். பெண்ணின் தாயும் இதையே சொல்லியதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, அந்த இடத்தில் இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் புகார்தாரரைப் பிடித்து, கோடரியால் தாக்கி அவரது அந்தரங்க உறுப்பைத் துண்டித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில், மனைவியின் தாய், பாட்டி மற்றும் சகோதரியால் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் மாமியார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அறிவுறுத்தலைத் தவிர, அவருக்கு எந்த குறிப்பிட்ட தீங்கும் இழைக்கப்படவில்லை என்று வாதிட்டார். 86 வயதான மூதாட்டி, பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாகக் கூறி ஜாமீன் கோரியிருந்தார். முதல் தகவல் அறிக்கையில் தன் பெயர் இல்லை என குற்றம்சாட்டப்பட்ட சகோதரி கூறினார்.

அவரின் பாட்டி 42 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர் எனக் கூறி ஜாமீன் வழங்குவதற்கு அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புகார்தாரரின் அந்தரங்க உறுப்பைத் துண்டிக்க மற்ற குடும்ப உறுப்பினர்களை அவர் அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget