மேலும் அறிய

Solar Eclipse 2024: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இதோ.. இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?

வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி தோன்றும் சூரிய கிரகணம் இந்தியாவில் காண இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி நிகழ உள்ளது. இதனை இந்தியாவில் காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் என்பது பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும்  ஒரே நேர்க்கோட்டில் வருவது தான். அதாவது நிலவு, பூமி மற்றும் சூரியன் இடையே வரும் போது சூரியனை மறைக்கும். அப்படி நிகழும் போது சூரிய கிரகணம் தோன்றும். இது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் மற்றும் வளைய சூரிய கிரகணம் என மூன்று வகையாக தோன்றும்.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்பது நிலவு சூரியனின் பெரும்பாலான பகுதி மறைத்து நிலவின் விளிம்பில் சூரிய ஒளி வளையம் போன்று தோன்றும். அந்த சமயத்தில் பூமியின் சில பகுதிகளில் வளைய வடிவில் நிழல் தோன்றும். ஹைப்ரிட் சூரிய கிரகணம் என்பது பகுதி, முழு மற்றும் வளைய சூரிய கிரகணத்தின் கலவையாகும்.

இந்தியாவில் பார்க்க முடியுமா? 

இந்த ஆண்டு 4 கிரகணங்கள் தோன்றும், 2 சந்திர கிரகணம் 2 சூரிய கிரகணம். இந்த ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி தோன்றியது. அதேபோல் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி சூரிய கிரகணம் தோன்றுகிறது. ஆனால் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தென்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு சூரிய கிரகணம் ஆரம்பிக்கும். இதன் உச்சம் நள்ளிரவு 12 மணியளவில் நிகழும். அதிகாலை 1.25 மிணிக்கு சூரிய கிரகணம் முடிவடைகிறது.

இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தென்படாது என்றாலும்,  இந்த கிரகணம் தென்மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், வட துருவம், தென் துருவம் ஆகிய பகுதிகளில் தெரியும்.

ஒவ்வொரு கிரகணத்தின்போது கோயில் நடை மூடப்படும். இதனை சூதக் காலம் என அழைப்பார்கள். இந்தியாவில் கிரகணம் தென்படாது என்பதால் சூதக் காலமும் கணக்கில் வராது.

சூரிய கிரகணத்தை பாதுகாப்பாக பார்ப்பது எப்படி?

தொலைநோக்கியைப் பயன்படுத்தி பார்க்கலாம். சூரிய கிரகணத்தைக் காண, பிளாக்சி பாலிமர், அலுமினிஸ்டு மைலார் போன்ற கண் வடிகட்டிகள் அல்லது வெல்டிங் கிளாஸைப் பயன்படுத்தி காணலாம். இருப்பினும், கிரகணத்தை நேரடியாக வெறும் கண்களில் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly Session LIVE: அடுத்த 2 ஆண்டுகளில், 10,000 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும் - முதல்வர் ஸ்டாலின்
அடுத்த 2 ஆண்டுகளில், 10,000 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும் - முதல்வர் ஸ்டாலின்
Salem Leopard: சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
Lionel Messi Birthday: உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
Latest Gold Silver Rate: வாரத்தின் முதல் நாள்.. தங்கம் விலையில் ஏற்றம்.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
வாரத்தின் முதல் நாள்.. தங்கம் விலையில் ஏற்றம்.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Session LIVE: அடுத்த 2 ஆண்டுகளில், 10,000 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும் - முதல்வர் ஸ்டாலின்
அடுத்த 2 ஆண்டுகளில், 10,000 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும் - முதல்வர் ஸ்டாலின்
Salem Leopard: சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
Lionel Messi Birthday: உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
Latest Gold Silver Rate: வாரத்தின் முதல் நாள்.. தங்கம் விலையில் ஏற்றம்.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
வாரத்தின் முதல் நாள்.. தங்கம் விலையில் ஏற்றம்.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
Shocking Video: பெண் டோல் கேட் ஊழியரை இடித்த கார்.. தடுக்க முயன்ற நபர் கொலை.. அதிர்ச்சி வீடியோ!
பெண் டோல் கேட் ஊழியரை இடித்த கார்.. தடுக்க முயன்ற நபர் கொலை.. அதிர்ச்சி வீடியோ!
Kanguva: “எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
“எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
Lok Sabha Session: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
Embed widget