Bharat Jodo Yatra : தொடரும் ராகுல் காந்தியின் யாத்திரை.. ஒற்றுமை பயணத்தில் இணைந்த ஷூட்டர் பாட்டி..
Bharat Jodo Yatra : ராகுலின் பாரத் ஜடோ யாத்ராவில் இணைந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை.
ராகுல் காந்தியின் ‘ஒற்றுமை பயண’த்தில் முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை பிரகாஷி தோமர் (Prakashi Tomar) கலந்து கொண்டார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பகத்பாட் மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டார். இதில் இந்தியாவின் பிரபல துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீராங்கனை பிரகாஷி தோமர் பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார். ’ஷூட்டர் தாதி’ (ஷூட்டர்என்று அழைக்கப்படுபவர் ராகுலுடன் பாரத் ஜடோ யாத்திராவில் கலந்து கொண்டது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
भारत जोड़ो यात्रा मैं राहुल गांधी जी का हमारे बागपत मैं स्वागत है ! #BharatJodoYatraInUP pic.twitter.com/GSaM9FIQIy
— Dadi Prakashi Tomar 🇮🇳 (@shooterdadi) January 4, 2023
இந்த யாத்திரை 110 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதுவரை 3,000 கி.மீ. தூரம் கடந்துள்ளது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் யாத்ராவை கடந்த செப்டம்பர் 7 ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார். இன்று தொடங்கிய பயணம் இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா டெல்லி மாநிலங்களை கடந்து நடைப்பயணம் நடைபெற்று வருகிறது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலை எதிர்த்தும் மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லி நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும் கூறி, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை எனும் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்கத் திட்டமிட்டு, அதன்படி, தற்போது பயணித்து வருகிறார்.
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்திய வரலாற்றில் எந்த ஒரு இந்திய அரசியல்வாதியும் இவ்வளவு நீண்ட நடைப்பயணம் மேற்கொண்டதில்லை என்றும் இதுவே மிக நீண்ட நடைப்பயணம் என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஜனவரி 26 ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடையும் யாத்திரைக்குப் பிறகு, இந்த பயணத்தின் நோக்கத்தை அனைத்து பகுதிகளிலும் கொண்டு செல்வதற்காக 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கும்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும் ஏஐசிசி தேசிய பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ராவிடம், பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, நாடு முழுவதும் 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பிரச்சாரத்தை வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "பாரத் ஜோடோ யாத்திரைக்கு பின், இரண்டு மாத காலம் 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பிரசாரத்தை, காங்கிரஸ் தொடங்கும்.