“மீசை என் கௌரவம்; இதனால் மாஸ்கை வெறுக்கிறேன்” - கேராளாவில் கெத்து காட்டும் புதுமைப்பெண்!
பலர் மீசையை எடுக்க சொல்லியும், முகத்தில் உள்ள மீசையை எடுக்க அவர் ஒருபோதும் நினைத்ததில்லையாம்.
கேரளா மாவட்டத்தின் கண்ணூர் பகுதியில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் அவரது மீசையை கவுரமாக நினைத்து வளர்த்து வருகிறார். பலர் மீசையை எடுக்க சொல்லியும், முகத்தில் உள்ள மீசையை எடுக்க அவர் ஒருபோதும் நினைத்ததில்லையாம்.
35 வயதான சைஜா, தனது உதட்டுக்கு மேல் இருக்கும் ரோமங்களை வளர்க்க ஆசைப்படுகிறார். “பலரும் என் மீசையை கண்டு திகைத்து நிற்பார்கள், இருந்தும் என் மீசையை நான் ஆசையாக தான் வளர்க்கிறேன். மற்றவர்கள் என்னை பற்றி எப்படி நினைக்கிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலை கிடையாது. நான் வாழ்வதே ஒரு வாழ்க்கை அதை எனக்காக என் விருப்பப்படி வாழ விரும்புகிறேன். மற்றோரு வாழ்கை என ஒன்று இருந்தால், அதில் நான் மற்றவர்களுக்காக வாழ்ந்து கொள்கிறேன்.
எனது கணவர் மற்றும் என் குடும்பத்தினர் இதைக்குறித்து எந்த கேள்வியும் கேட்டதில்லை. அவர்களுக்கு நான் மீசையை வளர்ப்பது பற்றி எந்த ஆட்சேபனையும் இல்லை. மீசை இல்லாமல் வாழ என்னால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. மாஸ்க் அணிந்தால் என் முகம் மறைந்துவிடுகிறது. அதனால் நான் மாஸ்க் அணிவதையே வெறுக்கிறேன்” என சைஜா கூறியுள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு சைஜா, தனது கருப்பையை நீக்க மொத்தம் 6 அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவரது மார்பக பகுதியிலிருந்து கட்டியினை நீக்கவும் ஒரு அறுவை சிகிச்சையை செய்துள்ளார்.சைஜாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட உடல் நல குறைவு பிரச்சினைகள் அனைத்துமே அவரை வலுப்படுத்தியதாக கருதுகிறார். அதுவே, அவரை தனக்கான வாழ்க்கையை வாழ வைத்துள்ளதாகவும் அவர் நினைக்கிறார்.
ஒருகாலத்தில் இவைப்பற்றி கவலைப்பட்டாலும், அவருக்கு வாழ்க்கையை வாழ நம்பிக்கையயும் உத்வேகத்தையும் வழங்கியுள்ளதாகவும் இந்த மனப்பக்குவத்தை தனது மகள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சைஜா ஆசைப்படுகிறார்.
பெரும்பாலன பெண்கள் உடம்பில் வளரும் ரோமங்களை விரும்பவதில்லை, மார்க்கெட்டில் விற்கப்படும் பல பொருட்களை வாங்கி, அவர்கள் தேவையற்ற ரோமம் என கருதும் முடிகளை நீக்கிவிடுகின்றனர். தேவையற்ற ரோமங்களை நீக்குவது தவறு கிடையாது. ஒருவரின் தோற்றம் அவரவர்களின் சுயவிருப்பமாகும். ஒருவர் தன்னை எப்படி வெளிப்படுத்திக்க நினைக்கிறார்களோ அப்படியே அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வெளிப்படுத்திக்கொள்ளலாம்.
சில மக்கள் மற்றவர்களின் மனது புண்படும் என எண்ணாமல் அசால்டாக இன்சல்ட் செய்திடுவார்கள். நீ ரொம்வ குண்டா இருக்க, உடம்பை கொஞ்சம் குறைக்கலாம், அதோ பாரு ஒல்லிகுச்சி பொண்ணு, உனக்கு என்ன ஆம்பளைங்க மாறி மீசை இருக்கு? போன்ற டயலாக்ஸ்களை இந்த சமூகமானது தொடர்ந்து நச்சரித்துகொண்டுதான் இருக்கும்.
விளம்பரங்களை கண்டோ, சுற்றி இருப்பவர்களை பார்த்தோ தயக்கத்தால் தங்களையோ அல்லது தங்களது தோற்றத்தையோ மாற்றிக்கொள்வது முட்டாள்தனம் என்ற கூற்றை நமக்கு நியாபகப்படுத்தும் விதமாக சைஜா காட்சியளிக்கிறார் என்பது மிகையல்ல.