சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட சந்திரமௌலி ரெட்டிக்கு திடீர் மாரடைப்பு.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சேகர் ரெட்டியின் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட சந்திரமௌலி ரெட்டிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சேகர் ரெட்டியின் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட சந்திரமௌலி ரெட்டிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இருவருக்கும் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 26-ந் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருந்ததும், இதனை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நடத்தி வைப்பதாகவும் இருந்தது.
சந்திரமவுலி ரெட்டிக்கு நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவேரி மருத்துவமனை தரப்பில் நேற்று அவரது மருத்துவக்குறிப்பு வெளியானது.
மருத்துவமனையின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள அந்த மருத்துவக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
டிசம்பர் 18-ந்தேதி (நேற்று முன்தினம்) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சந்திரமவுலி ரெட்டி, காவேரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சி.பி.ஆர். பரிசோதனைகள் முடிந்த நிலையில், அவர் கேத் லேப் பிரிவில் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டு, இதய தமனியில் 'ஸ்டண்ட்' கருவி பொருத்தப்பட்டது. உடல் உறுப்புகள் செயலிழந்து வரும் நிலையில் அவர் கவலைக்கிடமாக இருக்கிறார். அவரை மருத்துவமனையில் இருக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் சூழலில் மணமகனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது இருவீட்டாருக்கும் இடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.