Kolkata: தொடரும் வன்முறை சம்பவங்கள்.. கொல்கத்தாவில் அடுத்த 60 நாள்களுக்கு 144 தடை உத்தரவு!
கொல்கத்தாவில் அடுத்த 60 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள், வரும் 28ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக கொல்கத்தா காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Section 144: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அடுத்த 60 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளதாக கொல்கத்தா காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வன்முறை சம்பவங்கள் நடைபெறும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்ததையடுத்து பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடக் கூடாது என கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் குமார் கோயல் கூறுகையில், "28.05.2024 முதல் 26.07.2024 வரை 60 நாட்களுக்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக ஒன்றுகூடுவதைத் தடைசெய்யும் ஐபிசி பிரிவு 144 ஐ கொல்கத்தா காவல்துறை ஆணையர் பிறப்பித்துள்ளார்.
Kolkata Commissioner of Police imposes section 144 of the IPC prohibiting any unlawful assembly of five or more persons for 60 days from 28.05.2024 to 26.07.2024 or until further order based on information received from credible sources that violent demonstrations are likely to… pic.twitter.com/qkxdOefwz0
— ANI (@ANI) May 24, 2024
Kolkata Police issues 144 Cr PC order in vicinity of Dalhousie and Victoria house on regular basis. This is nothing new and copies of previous orders being attached. So please refrain from spreading misleading information. https://t.co/UdpHbUCACl pic.twitter.com/JL7SgBtDDD
— Kolkata Police (@KolkataPolice) May 24, 2024