ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடக் கோரி மனு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடக்கோரி உச்ச நீதிமன்றத்திற்கு பெங்களூருவைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிங்க மூர்த்தி மனு.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான பொருட்களை ஏலம் விடக்கோரி உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம், பெங்களூரு முதன்மை உரிமையியல் நீதிமன்றத்திற்கு பெங்களூருவைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிங்க மூர்த்தி என்பவர் மனு அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ. ஜெயலலிதா அவர்கள், 1996ம் ஆண்டில் வருமானத்திற்கு மேலாக சொத்து குவித்ததிற்கு எதிராக எழுந்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இவருடன் இவரது தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்களிடமிருந்து பல கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போதைய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான பொருட்கள் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பொருட்களை ஏலத்தில் விட பெங்களூருவைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் பெங்களூரு முதன்மை உரிமையியல் நீதிமன்றத்திற்கு மனு அளித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட்டால் அவரது ஆதரவாளர்கள் ஏலத்தில் மும்மறமாக கலந்து கொள்வர். இதனால் பொருட்கள் யாரும் எதிபார்க்காத விலைக்கு ஏலம் போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1991 முதல் 1996 வரை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா மாநிலம் முழுவதும் பல நிலங்களை வாங்கினார். ஜெயலலிதாவின் செல்வாக்கினைப் பயன்படுத்தி அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோறும் தமிழகத்தின் பல பகுதிகளில் சொத்துக்கள் வாங்கி குவித்தனர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட 800 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் நகைகள், 28 கிலோ தங்க நகைகள், 750 ஜோடி காலணிகள், 10500 புடவைகள், 91 கைக்கடிகாரங்கள் மற்றும் விலையுர்ந்த பல பொருட்கள் ஏலத்தில் விடலாம். நரசிம்ம மூர்த்தி மனுவால் இப்பொருட்கள் ஏலத்திற்கு வரும்பட்சத்தில் ஜெயலலிதாவின் அபிமானிகள், அதிமுக பொருப்பாளர்கள், அடிமட்டத் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டு போட்டிபோட்டு பொருட்களை வாங்குவர் எனவும் எதிர்பார்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்