saif ali khan: கணவர் சயிஃப் அலி கானை குத்தியது யார்? மனைவி கரினா கபூர் தகவல், ஆனால் காவல்துறை சொல்வது வேறா?
Saif Ali Khan Stabbed: நடிகர் சயிஃப் அலி கானை குத்தியது யார் என்பது குறித்து அவரது மனைவி கரீனாஅ கபூர் தகவல் வெளியிட்டுள்ளார்.

Saif Ali Khan Stabbed: நடிகர் சயிஃப் அலி கானை கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சயிஃப் அலிகான் மீது தாக்குதல்
பாலிவுட் நட்சத்திரம் சயிஃப் அலி கான் தனது பாந்த்ரா இல்லத்தில் நள்ளிரவில் நடந்த தாக்குதலில், முதுகெலும்பு உட்பட 6 இடங்களில் காயமடைந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகிறார். இந்நிலையில், பாந்த்ரா வெஸ்டில் உள்ள உயர் பாதுகாப்பு சத்குரு ஷரன் குடியிருப்புக்குள் தாக்குதல் நடத்தியவர் எப்படி நுழைந்தார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. போலீசாரின் விசாரணையின் மத்தியில், தாக்குதல் நடத்தியவர் எப்படி நடிகரின் வீட்டிற்குள் நுழைந்தார் என்பது குறித்து இரண்டு வெவ்வேறு கதைகளாக உள்ளது.
கரீனா கபூர் சொல்வது என்ன?
சயிஃபின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சயிஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் கான் வீட்டில் நேற்று இரவு திருட்டு முயற்சி நடந்தது. அதில் சயிஃப் கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் நலமுடன் உள்ளனர். போலீசார் தங்கள் விசாரணையை மேற்கொண்டு வருவதால், மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் கூடுதலாக மேலும் எதையும் ஊகிக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது தொடர்பாக அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
காவல்துறை சொல்வது என்ன?
திருட முயன்றவர் சயிஃப் அலிகானை தாக்கியதாக, கரினா கபூரின் மனைவியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு ஒரு தனி கோட்பாடு உள்ளது. காவல்துறையினரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை என்றாலும், தாக்குதல் நடத்தியவர் நடிகர்களின் வீட்டில் பண்புரியும் வீட்டு உதவியாளருக்குத் தெரிந்தவரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ஆய்வு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளின்படி, தாக்குதலுக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் வளாகத்தில் இருந்திருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
திருடனுடன் தகராறு செய்த பணிப்பெண்ணின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்ய வாய்ப்புள்ளது. அந்த வாக்குவாதத்தின் போது சயிஃப் அலிகான் தலையிட்டதில், சந்தேக நபரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அவருக்கு முதுகில் ஆழமான வெட்டு உட்பட ஆறு காயங்கள் ஏற்பட்டன என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாலிவுட்டின் பிரபலமான ஜோடியான சயிஃப் அலி கான் மற்றும் கரினா கபூருக்கு, கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு தற்போது 8 மற்றும் 4 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.





















