மேலும் அறிய

சபரிமலை மகரவிளக்கு பூஜை: நாளை தரிசனம்! பக்திப் பரவசத்தில் பக்தர்கள், பாதுகாப்பு தீவிரம், சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நாளை பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சபரிமலை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் காத்திருக்கும் மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் முதல் பூஜைகள் தொடங்கின.

சபரிமலை மகரவிளக்கு பூஜை: நாளை தரிசனம்! பக்திப் பரவசத்தில் பக்தர்கள், பாதுகாப்பு தீவிரம், சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

மகரவிளக்கு பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் நேற்று முன்தினம் (11ம் தேதி) நடைபெற்றது. மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணம் பந்தளத்தில் இருந்து நேற்று ஊர்வலமாக புறப்பட்டது. சபரிமலை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் காத்துக் கொண்டிருக்கும் மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நாளை நடைபெறுகிறது.

நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு 2.45 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும். தொடர்ந்து மகரஜோதி தரிசனத்திற்கு முன்னோடியாக நடைபெறும் மகர சங்கிரம பூஜை 3.08 மணிக்கு தொடங்கும். இதன்பிறகு மாலை 6.35 மணியளவில் திருவாபரணம் சன்னிதானத்தை அடையும். பின்னர் இந்த திருவாபரணம் ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரியும். இதன் பிறகு இரவு 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். பல நாட்களுக்கு முன்பே ஏராளமான பக்தர்கள் மகரஜோதியை தரிசிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் குடில் கட்டி தங்கியுள்ளனர். மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏடிஜிபி, 2 ஐஜிக்கள், 4 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சபரிமலை மகரவிளக்கு பூஜை: நாளை தரிசனம்! பக்திப் பரவசத்தில் பக்தர்கள், பாதுகாப்பு தீவிரம், சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நாளை பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட  ஆட்சியர்  உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை மூடப்பட்டிருக்கும். சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகரவிளக்கு பூஜையை ஒட்டி, கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கொல்லத்தில் இருந்து வரும் 15ம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், பெரம்பூர் வழியாக மறுநாள் பகல் 12:00 மணிக்கு காக்கிநாடா டவுனுக்கு செல்லும். பின், காக்கிநாடாவில் இருந்து வரும் 16ம் தேதி மாலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், பெரம்பூர் வழியாக மறுநாள் இரவு 10:30 மணிக்கு எர்ணாகுளம் செல்லும். இந்த சிறப்பு ரயில்களில் இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Embed widget