Sabarimala Temple: பிரதிஷ்டை பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு..! மீண்டும் எப்போது திறக்கப்படும்?
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பிரதிஷ்டை தின சிறப்புன் பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை, மண்டல பூஜை தவிர விஷேச நாட்கள் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டும்.
சபரிமலை ஐயப்பன் கோயில்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும்.
வைகாசி மாதம் நடை திறப்பு:
வைகாசி மாத பூஜைக்காக கோயில் நடை மே 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். மே 14 முதல் 5 நாட்கள் கோயில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டது. தினசரி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்தார். பதினெட்டாம் படிக்கு கீழ் இருக்கு கற்பூர ஆழியில் நெருப்பு மூடப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து இன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆனி மாத பூஜைக்காக ஜூன் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும். ஜூன் 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் தரிசனம்:
இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mettur Dam: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு - தற்போதைய நிலவரம் என்ன?