இந்திய ஒலிம்பிக் அசோஷியேசனுடன் கைகோர்க்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. தகவல்கள் இவைதான்..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்திய ஒலிம்பிக் அசோஷியேசனுடன் கைகோர்த்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்திய ஒலிம்பிக் அசோஷியேசனுடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அனைத்து வகைகளிலும் உறுதுணையாக இருக்கப் போகிறது.
இதனையடுத்து முதல் அடியாக 2024ல் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா ஹவுஸ் அமைக்கப்படவுள்ளது.
ஒலிம்பிக் போட்டி உலகின் சிறந்த விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்களுக்காக இந்தியா ஹவுஸ் அமைப்பது என்பது உலகத்தையே இந்தியாவை திரும்பிப் பார்க்கவைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்திய வீரர்கள் சொந்த நாட்டிலிருந்து புறப்பட்டு நாட்டுக்காக விளையாடச் செல்லும் இடத்தில் நாட்டை சற்றும் மிஸ் செய்யாமல் சவுகரியமாக இருந்து விளையாட்டில் முழுக் கவனத்தையும் செலுத்த முடியும்.
இது குறித்து இந்தியன் ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடடின் இயக்குநருமான நிதா எம் அம்பானி கூறுகையில், இது எங்களின் கனவு. சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கனவு கண்டோம். இந்தியன் ஒலிம்பிக் அசோஷியசனுடன் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் ஒருங்கிணைந்து இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கும். 20224 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஹவுஸை அமைப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.
இதனையொட்டி 140வது ஐஓசி கருத்தரங்கை ஜூன் 2023ல் மும்பை ஜியோ வேர்ல்டு சென்டரில் நடக்கிறது. இந்த கருத்தரங்கு இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி நடப்பது இன்னும் பெருமைக்குரியது.
Reliance Industries Limited (RIL) announces a long-term partnership with Indian Olympic Association (IOA) with the aim to support Indian athletes in major multi-sport events including the Commonwealth Games, Asian Games and the Olympics pic.twitter.com/9BtHdcC1xi
— ANI (@ANI) July 27, 2022
மே 2022ல் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் வேல்யூஸ் எஜுகேஷன் புரோகிராம் (OVEP) ஒடிசாவில் நடத்தப்பட்டது. இத்திட்டம் இளைஞர்களை ஒலிம்பிக் மதிப்பீடுகளான தனிச்சிறப்பு, மரியாதை, நட்பு ஆகியனவற்றை அறிமுகப்படுத்தும் செயலாகும். இந்தத் திட்டம், குழந்தைகள் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும், பொறுப்புள்ள குடிமகன்களாகவும் மாற உதவும் என்றார்.
ஒலிம்பிக் ஹாஸ்பிடாலிட்டி ஹவுஸ்
உலக நாடுகள் பலவும் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்போது அந்த இடங்களில் தங்களின் நாட்டு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒலிம்பிக் ஹாஸ்பிடாலிட்டி ஹவுஸ் அமைக்கும். ஒலிம்பிக் ஹாஸ்பிடாலிட்டி ஹவுஸ் ஆனது விளையாட்டு ரசிகர்கள், சுற்றுலாப் பயணிகள், பிற நாட்டு விளையாட்டு வீரர்கள் என அனைவருக்கும் ஒரு தேசத்தைப் பற்றி புரிந்து கொள்ள உதவும். மேலும் ஹாஸ்பிடாலிட்டி ஹவுஸில் அந்தந்த நாட்டு அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் தங்கும் இடமாகவும் அமையும். 206 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 50 நாடுகள் தங்களின் ஹாஸ்பிடாலிட்டி ஹவுஸ்களை அமைத்திருந்தது. 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் முதன்முறையாக இந்தியா தனது ஹாஸ்பிடாலிட்டி ஹவுஸை அமைக்கும்.