புதுச்சேரிக்கு மருத்துவ பல்கலைக்கழகம்! மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!
புதுச்சேரியில் மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விடம் முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை
புதுச்சேரியில் மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை விடுத்தார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கொடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- புதுவையில் 9 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இங்கு சுமார் 1,500 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர். எனவே, புதுவையில் மருத்துவ கவுன்சில் அமைக்க அனுமதிக்க, வேண்டும். புதுச்சேரியில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க ரூ.200 கோடி வழங்க வேண்டும். மேலும் புதுச்சேரியில் மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கவும் அனுமதி தரவேண்டும். தேசிய அளவிலான மருத்துவ திட்டங்களை நாங்கள் சிறப்பாக செயல் படுத்தி வருகிறோம். அதற்கான நிதியை 90:10 என்ற அடிப்படையில் (90 சதவீத நிதியை மத்திய அரசு தர) வழங்கவேண்டும்.
பள்ளி கழிவறையை சுத்தம் செய்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் - வைரலாகும் புகைப்படம்
கேன்சர் கேர் யூனிட்: கேன்சர் பாதிப்பு என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதற்காக முழு வசதியுடன் கூடிய கேன்சர் கேர் யூனிட் அமைக்க ரூ.93 கோடி செலவாகும். அதற்கான முழு தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும். புதுவையில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான வழிகாட்டுதலின்படி புதுவையில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 66 குடும்பங்கள் தகுதி பெற்றவை. புதுவை மருத்துவ நிதியுதவி சொசைட்டி இந்த திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டதால் கூடுதலாக 74 ஆயிரத்து 667 குடும்பங்கள் பயன்பெறும்.
காப்பீடு திட்டத்துக்கு 60:40 என்ற விகிதத்தில் நிதியுதவி செய்யப்படுகிறது. ஆனால் யூனியன் பிரதேசங்களான லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபர், லடாக், சண்டிகர், ஜம்மு, காஷ்மீரில் இது 90.10 என்ற விகிதத்தில் உள்ளது. ஆனால் புதுச்சேரிக்கு அந்த முறையில் நிதி வழங்கப்படுவதில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக புதுவை மத்திய அரசிடமிருந்து விருது பெற்றுள்ளது. எனவே, 90:10 என்ற அடிப் படையில் நிதியுதவியை வழங்கவேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.
மேலும் படிக்க: திரை தீப்பிடிக்கும்..! விக்ரம் படத்தின் போது தீப்பற்றிய திரை! அலறியடித்து ஓடிய கூட்டம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்