கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்திருப்பது நெஞ்சை உலுக்கும் விபத்து - குடியரசுத் தலைவர் இரங்கல்!
கடலூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் இரங்கல் செய்தி:
கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற 6 சிறுமிகள் உள்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது நெஞ்சை உலுக்கு விபத்து என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கடலூரில் அருகே உள்ள ஆற்று நீரில் மூழ்கி 7 சிறுமிகள் உயிரிழந்தது நெஞ்சை உலுக்கும் விபத்து. இதுபோன்ற விபத்துக்கள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. சிறுமிகளை இழந்த குடும்பத்தினருக்கு என் இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The drowning of seven girls in a check dam on a river near Cuddalore, Tamil Nadu, is a heart-rending tragedy. Such events shock me to the core. I convey my condolences to the bereaved families.
— President of India (@rashtrapatibhvn) June 6, 2022
பிரதமர் இரங்கல் செய்தி:
”கடலூரில் ஆற்று நீரில் மூழ்கி இளைஞர்கள் உயிரிழந்திருக்கும் செய்தி என்னை வேதனையடைச் செய்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆறுதல்.” என்று டிவிட்டரில் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
I’m saddened by the drowning of youngsters in Tamil Nadu’s Cuddalore. In this time of grief, my thoughts are with the bereaved families: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 6, 2022
கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு:
கடலூர் மாவட்டம் அருங்குணம் அருகே கெடிலன் ஆற்றில் குளித்த 6 சிறுமிகள் உள்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் ஏ.குச்சிப்பாளையத்தையொட்டி கெடிலம் ஆறு உள்ளது. இன்று காலை அதே பகுதியை சேர்ந்த 6 சிறுமிகள் உள்பட, பிரியா(17), சங்கீதா(17), சுமிதா (16) மோனிகா(15), பிரியதர்ஷினி(14), கவிதா(12), மற்றும் நவநீதா(9) என ஏழுபேர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அங்குள்ள தடுப்பணையில் குளித்த போது 7 பேரும் நீரில் மூழ்கினர்.
முதலில் தடுப்பணையில் ஏற்பட்ட சூழலில் 2 பேர் சிக்கியுள்ளனர், அவர்களை காப்பாற்ற முயன்ற 5 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த அக்கம் பக்கத்தினர். ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.