Raksha Bandhan 2023: ரக்ஷா பந்தன் எப்போது? ராக்கி கட்டுவதற்கு நல்ல நேரம் எது? கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம் என்ன?
சகோதர பந்தத்தை வெளிப்படுத்தும் பண்டிகையான ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
Raksha Bandhan 2023: சகோதர பந்தத்தை வெளிப்படுத்தும் பண்டிகையான ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ரக்ஷா பந்தன் வரலாறு:
ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் மகாபாரத புராணக் கதையுடன் தொடர்புடையது. கிருஷ்ண பரமாத்மா ஒருமுறை பட்டம் விடும்போது அவரது கைவிரலில் நூல் அறுத்துவிடுகிறது. அதனைப் பார்த்ததும் திரெளபதி தனது சேலை முகப்பைக் கிழித்து காயத்துக்குக் கட்டுப்போடுகிறார். அதனைப் பார்த்த கிருஷ்ண பரமாத்மா, நான் உன் வாழ்வின் கடினமான காலகட்டத்தில் உற்ற துணையாக இருப்பேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். திரெளபதி துயில் உரியப்பட்ட சம்பவத்தின்போது அவருடைய மானம் காக்கப்பட்டது. அன்று முதல் திரௌதியை தன் சகோதரியாக ஏற்றுக் கொண்டு, எந்த ஒரு சூழ்நிலையிலும் உன்னை கைவிட மாட்டேன், உன் பிரச்சனைகளிருந்து மீட்டு, உனக்கு கை கொடுப்பேன் என்று உறுதியளித்தார். கிருஷ்ணரின் கையில் திரௌபதி புடவையைக் கிழித்து கட்டிய நிகழ்வை குறிக்கும் விதமாக, ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது.
முக்கியத்துவம்:
சகோதர சகோதரிகளின் உறவை பலப்படுத்தும் பண்டிகையாக கருதப்படுவது ரக்ஷா பந்தன்(Raksha Bandhan) . இந்த பண்டிகை தென்னிந்தியாவில் ஒரு சில இடங்களில் கொண்டாடப்பட்டாலும் , வட இந்தியாவில் பெரும்பாலானோர் கொண்டாடும் பண்டிகையாக உள்ளது. இந்த பண்டிகையின் போது வித விதமாக அலங்காரம் செய்யப்பட்ட அல்லது வெவ்வேறு வகைகளிலான ராக்கி என்னும் கயிற்றினை சகோதரிகள் , சகோதர்களின் கைகளில் கட்டி அவர்களுக்கு ஆரத்தி எடுத்து இனிப்புகளை வழங்குவார்கள். இது அவர்களின் நலம் மற்றும் வளம் வேண்டி சகோதரிகள் செய்யும் முறையாக கருதப்படுகிறது. பதிலுக்கு சகோதர்கள் அவர்களுக்கு ஆசி வழங்கி , பரிசுப்பொருட்களை வழங்கி அவர்களின் பாதுகாப்பிற்காக உறுதி அளிக்கிறார்கள் என்பதுதான் பண்டிகையின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. ராக்கி என்பது ஒரு கயிறை சகோதரர் கையில் கட்டுவது மட்டுமல்ல. அவர்களிடையே உள்ள இணைப்பை காட்டும் ஒரு பண்டிகை ஆகும்.
2023 ரக்ஷா பந்தன் எப்போது?
இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் ஆக்ஸ்ட் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெளர்ணமி திதி ஆகஸ்ட் 30 காலை 10.58 மணிக்கு தொடங்குகிறது. ஆகஸ்ட் 31ஆம் தேதி காலை 7.05 மணிக்கு முடிவடைகிறது. பஞ்சாகத்தின் படி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் ராக்கி கயிறை சகோதரிகள் சகோதரர்களுக்கு அணிவிக்கலாம். இந்நாளில், அரிய கிரகங்களின் சேர்க்கை நடக்க உள்ளது. இந்த சேர்க்கை 3 ராசிக்கார்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அதாவது, சூரியன், புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் சாதகமான நிலையில் உள்ளதால் சிம்மம், தனுசு, மிதுனம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நடக்கும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு ரக்ஷா பந்தன் பூர்ணிமா அன்று இந்த அரிய சேர்க்கை நடைபெறுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.