Rakhi Sawant: இன்ஸ்டாவில் சம்பாதித்தேன்.. அதுவும் போச்சு! முன்னாள் கணவர் மீது பரபரப்பு புகாரளித்த பிரபல நடிகை!
தன்னிடம் பணமோசடி செய்ததாக முன்னாள் கணவர் ரிதேஷ் மீது பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மும்பை ஒஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தன்னிடம் பணமோசடி செய்ததாக முன்னாள் கணவர் ரிதேஷ் மீது பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மும்பை ஒஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். தமிழில், 'என் சகியே', 'முத்திரை' போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அடிக்கடி சர்ச்சைக் கருத்துகளை வெளியிட்டு அதன் மூலமும் பிரபலமானவர் இந்தி நடிகை ராக்கி சாவந்த் . தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை ரகசியத் திருமணம் செய்திருந்தார் ராக்கி சாவந்த். அந்நிலையில் கணவரைப் பிரிந்துவிட்டதாகச் சில மாதங்களுக்கு முன் அறிவித்தார் நடிகை ராக்கி சாவந்த் .
பின்னர், தற்போது அடில் கான் துர்ரானி என்ற தொழிலதிபரைக் காதலித்து வருகிறார். தற்போது இருவரும் ஒன்றாக மும்பையில் வசித்து வருகின்றனர். நடிகை ராக்கிக்குப் புதிய பிஎம்டபிள்யூ காரை துர்ரானி பரிசளித்துள்ளார். துபாயில், அவர் பெயரில் ஒரு வீட்டையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் நடிகை ராக்கி சாவந்த், தனது முன்னாள் கணவர் ரிதேஷ் மீது மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பணமோசடி
அந்தப் புகாரில், ‘நாங்கள் ஒன்றாக இருந்தபோது, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட என் சமூகவலைதளக் கணக்குகளை ரிதேஷ் கையாண்டார். என் ஜிமெயில், கூகுள் பே, பேடிஎம் கணக்குகளையும் அவர்தான் பார்த்துக்கொண்டார். நாங்கள் பிரிந்தபின், அந்தக் கணக்குகளின் பாஸ்வேர்டை நான் மாற்றவில்லை. ரிதேஷ் அதை மாற்றிவிட்டார். அனைத்துக் கணக்குகளிலும் அவர் பெயரையும் போன் நம்பரையும் சேர்த்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதித்து வந்தேன். அதை அவர் ஹேக் செய்துவிட்டார்.
நன்மதிப்பை கெடுக்க முயல்கிறார்
என் மின்னஞ்சலில் இருந்து சேனல் ஒன்றிற்கு தவறாகத் தகவல் அனுப்பி இருக்கிறார். அதன் மூலம் எனக்கும் அந்த சேனலுக்குமான உறவைக் கெடுக்க முயற்சிக்கிறார். இன்ஸ்டாவில் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இதனால் எனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார். சுமுகமாகப் பிரிந்துவிட்டதால் என்னைப் பழிவாங்க மாட்டார் என்று நினைத்தேன். ஆனால் பழிவாங்குவதற்காக இப்படி செய்கிறார். ‘உன்னைத் தொலைத்துவிடுவேன்’ என அப்போது சொன்னார். அதோடு பிஹார் நீதிமன்றத்தில், என் மீது 10 வழக்குகளைத் தொடுத்து வாழ்க்கை முழுவதும் அலையவிடுவதாகவும் மிரட்டுகிறார்’ என, அந்த புகாரில் இந்தி நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்