New Chief Election Commissioner: இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் !
இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுஷில் சந்திராவின் பதவிக்காலம் வரும் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் மே 15ஆம் தேதி முதல் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1984ஆம் ஆண்டு ஜார்க்காண்ட் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக ராஜீவ் குமார் தன்னுடைய பணியை தொடங்கினார். அதன்பின்னர் அவர் பல்வேறு முக்கியமான பணிகளில் இருந்தார். 2019ஆம் ஆண்டு இவர் மத்திய நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இவருடைய பதவிக்காலத்தில் 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டன. அதன்பின்னர் இவர் மத்திய மனிதவள பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.
Rajiv Kumar has been appointed as the Chief Election Commissioner with effect from 15th May. pic.twitter.com/csUlIZwQib
— ANI (@ANI) May 12, 2022
கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அப்போது முதல் இவர் தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்தார். தற்போது அவர் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்