(Source: ECI/ABP News/ABP Majha)
Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
Rahul Gandhi: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்றும், இதனால் பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சிலரின் லாபத்துக்காக போலியான கருத்து கணிப்புகளால் 38 லட்சம் கோடி ரூபாய் பங்குச் சந்தையில் இழப்பு ஏற்பட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
பங்குச் சந்தையில் முறைகேடு:
டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது, தேர்தல் முடிவு வந்த நிலையில் எல்லோரும் உறைந்து போயிருக்கிறார்கள் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. 38 லட்சம் கோடி ரூபாய் பங்குச் சந்தையில் இழப்பு ஏற்பட்டது. போலியான கருத்துக் கணிப்புகள் மூலம், இந்த இழப்புகள் ஏற்பட்டன.
போலியான கருத்துக் கணிப்புகளை நடத்தியவர்கள் விசாரிக்க வேண்டும் . கருத்துக் கணிப்புகளுக்கு பிறகுதான் பங்குச் சந்தைகள் உயர்ந்தன. பங்குச் சந்தை முறைகேடு குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு தேவை
#WATCH | Congress leader Rahul Gandhi says, "This is a broader issue than just the Adani issue. It is connected to the Adani issue, but this is a much broader issue. This is directly the Prime Minister, the Union Home Minister, who is privy to data on actual election results, who… pic.twitter.com/816CPZlaQr
— ANI (@ANI) June 6, 2024