மேலும் அறிய

Rahul Gandhi: சிறுவனுடன் புஷ் அப் சேலஞ்ச் செய்த ராகுல் காந்தி; இந்திய ஒற்றுமை பயணத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு!

Rahul Gandhi: இந்திய ஒற்றுமை பயணத்தின் போது சிறுவனுடன் புஷ் அப் சேலஞ்ச் செய்த நிகழ்வு அனைவரையும் கவர்ந்துள்ளது.

Rahul Gandhi: இந்திய ஒற்றுமை பயணத்தின் போது சிறுவனுடன் புஷ் அப் சேலஞ்ச் செய்த நிகழ்வு அனைவரையும் கவர்ந்துள்ளது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.   

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கட்சியை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கினார். 

தற்போது ராகுல் காந்தி கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கர்நாடகாவின் சித்ரதுர்காவில் நடை பயணம் மேற்கொண்ட போது ஒரு சிறுவன் ராகுல் காந்தியை தன்னுடன் புஷ் - அப் செய்யுமாறு போட்டிக்கு அழைத்தார். சிறுவனின் அழைப்பினை ஏற்ற ராகுல் காந்தி, உடனே தான் நடந்து போய்க் கொண்டு இருக்கும் போதே புஷ் - அப் செய்தார். ராகுல் காந்தியுடன் சேர்ந்து அவருடன் நடை பயணம் மேற்கொண்ட கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் உட்பட மற்றவர்களும் இணைந்து புஷ் - அப் செய்தனர். புஷ் - அப் செய்து முடித்ததும், ராகுல் காந்தி அந்த சிறுவனை கை கொடுத்து வாழ்த்தினார். அந்த சிறுவனும் புஷ் - அப் செய்து முடித்ததும் ராகுல் காந்தியுடன் நடை பயணத்தினை தொடர்ந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 இதற்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில், பல்வேறு கல்வி நிலையங்களின் பிரிதிநிதிகளையும் ஆசிரியர்களையும் நேற்று ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது, இந்தி தேசிய மொழியாக்கப்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர், "இந்தியை மட்டும் 'தேசிய மொழி' ஆக்கி, கன்னடம் போன்ற பிராந்திய மொழிகளின் அடையாளத்தை அச்சுறுத்தும் எண்ணம் இல்லை" என்றார்.

இந்தியா முழுமைக்கும் நடைபயணம் மேற்கொள்ளவுள்ள ராகுல் காந்தியின் நடை பயணத்தில் ஒருநாள் கலந்து கொள்ளும்படியும், நாட்டை மதவாத சக்திகளிடம் இருந்து காக்க பாஜகவுக்கு எதிரான  காங்கிரஸ் கூட்டணியில் இணையுமாறும் லாலு பிரசாத்க்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு முன்னதாக லாலு பிரசாத், இந்தியாவைக் காப்பாற்ற பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

கொல்கத்தா துர்கா பூஜையில் 3 நிமிடங்களில் கோர விபத்து.! 19 பேர் பலி.. கூட்ட நெரிசலுக்கு இதுதான் காரணமா?
கொல்கத்தா துர்கா பூஜையில் 3 நிமிடங்களில் கோர விபத்து.! 19 பேர் பலி.. கூட்ட நெரிசலுக்கு இதுதான் காரணமா?
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Embed widget