Pegasus Phone Tapping: தொலைபேசி ஒட்டுக்கேட்பு: அரசியல் தலைவர்களின் ரியாக்ஷன்!
சுப்பிரமணிய சாமி: இந்தியர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்ட இஸ்ரேல் கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனத்துடன் மோடி அரசுக்கு தொடர்பு உள்ளதா? இல்லையா? என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்க வேண்டும்
பெகசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) என்ற உளவுச் செயலியின் மூலம் உலகின் பல நாடுகளை சேர்ந்த முக்கிய நபர்களின் தொலைபேசிகள் அரசுகளால் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியது. இந்த ஒட்டுகேட்பு மூலம் கண்காணிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள் . அதில் சவுதி இளவரசர் சல்மான் குறித்து எழுதிய ஜமால் காசோகி என்ற சவுதி பத்திரிகையாளரும், மெக்சிகோவில் ஊழல்கள் குறித்து தொடர்ந்து எழுதி வந்த CecilioPenidaBrito என்ற பத்திரிகையாளரும் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு உளவு பார்க்கப்பட்டிருக்கக்கூடும் என்ற பட்டியலில் இந்தியாவில் 40 பத்திரிக்கையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி( பெயர் வெளியிடவில்லை) மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தொலைபேசியும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் நிபுணர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் காந்தி:
கடந்த 16ம் தேதி காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் & சமூக ஊடக துறை உறுப்பினர்களுடன் காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் ராகுல்காந்தி கலந்துரையாடினர். அப்போது, தனது ட்விட்டரில், " நண்பர்களே, இன்றைய நாட்களில் என்ன வாசித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று எதேச்சையாக கேள்வி எழுப்பியிருந்தார்.
We know what he’s been reading- everything on your phone!#Pegasus https://t.co/d6spyji5NA
— Rahul Gandhi (@RahulGandhi) July 19, 2021
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு தொடர்பான ஆவணங்கள் நேற்று வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், ராகுல் காந்தி தனது 16ம் தேதி ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி, " அவர் என்ன படித்துக் கொண்டிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்- உங்கள் தொலைபேசியில் உள்ள அனைத்தும்!" என்று ஒற்றை வரியில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
மே 17 இயக்கம்: மே பதினேழு இயக்கம் இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மோடி அரசின் இத்தகைய ஜனநாயக விரோத, பாசிச போக்கு மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை. நாட்டின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசின் இந்த பாசிச போக்கை கண்டிக்க முன்வர வேண்டுமென மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது. இந்த உளவு செயலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்களை காக்க, அனைத்து ஊடகங்களும் முன்வர வேண்டும். அரசின் ஜனநாயக விரோத செயல்களை அம்பலப்படுத்தி, அரசின் அடக்குமுறையை அறத்துடன் எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே பாசிசத்தை வேரறுக்க முடியும் என்பதை ஊடகங்கள் உணர வேண்டும். அப்படியான முன்னெடுப்புகளுக்கு மே பதினேழு இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்பதை கூறிக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உளவு பார்க்கப்பட்டுள்ளார்
கே.எஸ் அழகிரி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி தனது ட்விட்டர் பதிவில், "இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனம் மூலம் இந்தியாவில் மட்டும் 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெகாஸஸ் ஸ்பைவேர் என்ற உளவு பார்க்கும் மென்பொருளைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் 37 தொலைப்பேசிகளில் உளவு பார்க்கப்பட்டுள்ளது. இதில் 10 இந்தியர்களின் தொலைப்பேசிகளும் அடங்கும்.
இஸ்ரேலின் NSO என்ற கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் 10நாடுகளில் 1,571 முக்கிய பிரமுகர்களின் தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டு, முக்கிய தரவுகள்கசிந்துள்ளன. இந்தியாவில் மட்டும் 300 தொலைப்பேசிகள் உளவுபார்க்கப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது pic.twitter.com/hXiTIK27uY
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) July 19, 2021
பெகசஸ் என்ற மென்பொருள் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, உலகில் உள்ள அரசாங்கங்கள் மட்டுமே இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் தொலைப்பேசிகள் ஹேக் செய்யப்பட்டு உளவு பார்க்கப்பட்டது குறித்து, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆர். கே. ராதாகிருஷ்ணன் : மூத்தப் பத்திரிக்கையாளர் ஆர். கே. ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில், "அரசாங்கங்கள் வழக்கமாக பத்திரிகையாளர்களை உளவு பார்க்கின்றன. ஆனால் பெகசஸ் புதியது. ஒரு பத்திரிகையாளரின் தொலைபேசியில் தட்டச்சு செய்யும் ஒவ்வொரு வார்த்தையையும் பார்க்க இஸ்ரேலிய நிறுவனத்தைப் பயன்படுத்துவது புதியது; அதுவும் வரி செலுத்துவோர் பணத்தில்! பெகாசஸ், அதன் ஸ்பைவேரை அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்கும் நிறுவனம். இது ஒரு கோரிக்கையின் பேரில் 40 இந்திய பத்திரிகையாளர்களை உளவு பார்த்தது. கேள்வி: பெகாசஸுக்கு வேலை கொடுத்தவர் யார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
#Pegasus: it appears that #RahulGandhi knew much before many of us did.
— RadhakrishnanRK (@RKRadhakrishn) July 19, 2021
That's why he asked the question: what are you reading these days!
He has a sense of irony and humour.
சுப்ரமணிய சாமி : பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணிய சாமி தனது ட்விட்டரில், "இந்தியர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்ட இஸ்ரேல் கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனத்துடன் மோடி அரசுக்கு தொடர்பு உள்ளதா? இல்லையா? என்பதை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்க வேண்டும். விளக்கமளிக்க தவறினால் அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழல்போல் போன்று பிஜேபிக்கு இது பெரிய தலைவலியாக மாறும்" என எச்சரித்தார்.
It will be sensible if the Home Minister tells Parliament that Modi Government has nor had any involvement with the Israeli company which tapped and taped our telephones. Otherwise like Watergate truth will trickle out and hurt BJP by halal route.
— Subramanian Swamy (@Swamy39) July 19, 2021