Punjab Firing: நீதிமன்ற வாசலில் சரமாரி துப்பாக்கிச்சூடு: 2 பேரைப் பிடித்து காவல்துறை விசாரணை..! நடந்தது என்ன?
Punjab Firing: நீதிமன்ற வாசலில் சரமாரியாக சுட்ட மூவரில் இரண்டு பேரைப் பிடித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Punjab Firing: நீதிமன்ற வாசலில் சரமாரியாக சுட்ட மூவரில் இரண்டு பேரைப் பிடித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்ற வளாகம் அருகே இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்தனர். இரு பிரிவினருக்கும் இடையிலான பழைய பகையே இந்த மோதலுக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஹிமான்ஷுவும் ஜஸ்பிரீத் சிங்கும் ஒரு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு தரப்பினருடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் அதன் பின்னர், மோதலுக்கு வழிவகுத்தது. இந்த மோதலின் போது இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரும் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூடுதல் போலீஸ் கமிஷனர் ராஜேஷ் சர்மா தெரிவித்தார்.