செல்பி எடுக்க முயன்ற பெண்.. 60 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததால் பரபரப்பு.. மீட்பு பணியில் திக் திக்!
புனேவில் பெண் ஒருவர் செல்பி எடுக்க முயன்று பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் போர்ன் காட் பகுதியில் பெண் ஒருவர் செல்பி எடுக்க முயன்று பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனமழைக்கு மத்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன் காரணமாக, தோஸ்கர் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் நிரம்பி வழிகின்றன.
பள்ளத்தாக்கில் விழுந்த பெண் மீட்கப்பட்டாரா? இருப்பினும், ஊர்க்காவல் படையினர் மற்றும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் அந்த பெண் மீட்கப்பட்டார். சனிக்கிழமை அன்று, புனேவைச் சேர்ந்த குழு ஒன்று தோஸ்கர் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றது. புனேவில் வார்ஜே பகுதியைச் சேர்ந்த 29 வயதான நஸ்ரீன் அமீர் குரேஷி, போரான் காட் பகுதியில் செல்பி எடுக்க முயற்சித்தபோது, 60 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்தார்.
ஆனால், உடனிருந்தவர்கள், சாமர்த்தியமாக செயல்பட்டு பள்ளத்தாக்கில் விழுந்த நஸ்ரீனை உடனடியாக மீட்டனர். சதாராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.
இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செல்பி எடுக்க முயன்றபோது நஸ்ரீன் கீழே விழுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுபோன்ற செயல்களில் அடங்கியுள்ள ஆபத்துகள் பற்றிய விவாதங்களை இவை எழுப்பியுள்ளது.
அபாயகரமான செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள்: பிரபலமடைவதற்காக அபாயகரமான இடங்களில் செல்பி எடுக்கும் போக்கு பெருகிய முறையில் பொதுவானதாகிவிட்டது. இவை, பெரும்பாலும் துயரமான சம்பவங்களில் முடிவடைகிறது.
சதாராவில் கனமழை பெய்து வருவதால் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. எனவே, இதுபோன்ற விபத்துகளை தடுக்க சுற்றுலா தலங்கள் மற்றும் அருவிகளை ஆகஸ்ட் 2 முதல் 4ம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர துடி உத்தரவிட்டார்.
SATARA | A 29-year-old woman was rescued after she fell into a deep gorge while taking selfie in Maharashtra's Satara, the police said.The woman had come to the Borne Ghat in the Satara district from Pune with a group of friends when she fell into the 100 feet deep gorge near… pic.twitter.com/HQHQ0m3yYO
— ℝ𝕒𝕛 𝕄𝕒𝕛𝕚 (@Rajmajiofficial) August 4, 2024
இருப்பினும், இந்த இயற்கை தளங்களின் வசீகரம் பார்வையாளர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. அவர்களில் சிலர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அங்கு செல்கின்றனர்.