மேலும் அறிய

Rangasamy CM | கொரோனாவில் இருந்து மீண்ட முதல்வர் ரங்கசாமி புதுவை திரும்பினார்..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று சிகிச்சை முடிந்து பாண்டிச்சேரி திரும்பினார்.

கடந்த ஆண்டு பரவிய கொரோனா முதல் அலையை காட்டிலும் தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நாடு முழுவதம் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெற்ற அதே நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி புதுவைக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அந்த மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.


Rangasamy CM | கொரோனாவில் இருந்து மீண்ட முதல்வர் ரங்கசாமி புதுவை திரும்பினார்..

மொத்தம் 30 தொகுதியை உள்ளடக்கிய புதுச்சேரியில் பெரும்பான்மையான இடங்களை என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து, அந்த மாநிலத்தின் முதல்-அமைச்சராக என்.ஆர்.ரங்கசாமி கடந்த 6-ஆம் தேதி பதவியேற்றார். இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன்காரணமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த 9-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மீண்ட புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு திரும்பினார். கார் மூலமாகவே சென்னையில் இருந்து புதுவை சென்ற அவருக்கு, தமிழகம் – புதுவை எல்லையில் அவரது கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், முதல்வர் ரங்கசாமி தனது வீட்டிலே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.


Rangasamy CM | கொரோனாவில் இருந்து மீண்ட முதல்வர் ரங்கசாமி புதுவை திரும்பினார்..

புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மட்டுமே பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளார். தேர்தலில் வெற்றிபெற்ற பிற எம்.எல்.ஏ.க்கள் யாரும் இதுவரை பதவியேற்கவில்லை. மேலும், என்.ஆர்.காங்கிரஸ்., பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளதால் அமைச்சர்கள் பட்டியலும் இதுவரை தயாராகவில்லை. தற்போதுவரை அந்த மாநிலத்தின் கொரோனா தடுப்புப்பணிகளை மாநில ஆளுநரான தமிழிசை சவுந்திரராஜன் கண்காணித்து வருகிறார். இதனால், விரைவில் அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெற்று, நிவாரண உதவிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Trailer: ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
Embed widget