சமூகத்திற்காக குரல் கொடுத்தவர் விவேக் - பிரதமர் மோடி புகழாரம்

நடிகர் விவேக்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு எக்மோ பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவருக்கு வயது 59. அவரின் உயிரிழப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரைப்பட கலைஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

நடிகர்கள் சூர்யா, கார்த்தி, மயில்சாமி, கவுண்டமணி, எம்.எஸ்.பாஸ்கர், கவிஞர் வைரமுத்து, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.சமூகத்திற்காக குரல் கொடுத்தவர் விவேக் - பிரதமர் மோடி புகழாரம்

முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலைமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்டோரும்  ட்விட்டர் மற்றும் அறிக்கை மூலம் இரங்கல் தெரிவித்தனர். மலையான நடிகர்கள் மோகன்லால். மம்முட்டி அவரது மகன் துல்கர் சல்மான் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The untimely demise of noted actor Vivek has left many saddened. His comic timing and intelligent dialogues entertained people. Both in his films and his life, his concern for the environment and society shone through. Condolences to his family, friends and admirers. Om Shanti.</p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/1383305397004476418?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 17, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ‘நடிகர் விவேக்கின் மரணம் பலரையும் வேதனை அடையச் செய்துள்ளது. அவரின் காமெடி நடிப்பும் மற்றும் வசன உச்சரிப்பும் மக்களை மகிழ்வித்தன. படங்களிலும், நிஜ வாழ்க்கையிலும் சுற்றுச்சுழல், சமூகத்திற்காக குரல் கொடுத்தவர். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விவேக்கின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விவேக்கின் உடல் இன்று மாலை 5 மணிக்கு விருகம்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது.

Tags: actor Vivek Vivek death vivek news Cardiac Arrest vivek vivek actor tamil actor vivek vivek age actor vivek news yuvarathnaa actor vivek age vivek family vivek tamil actor pm modi mourns

தொடர்புடைய செய்திகள்

''10 நிமிடங்களில் ரூ.16 கோடி உயர்ந்ததா அயோத்தியின் நிலம்? - பரபரப்பை உண்டாக்கிய குற்றச்சாட்டு!

''10 நிமிடங்களில் ரூ.16 கோடி உயர்ந்ததா அயோத்தியின் நிலம்? - பரபரப்பை உண்டாக்கிய குற்றச்சாட்டு!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

பீகாரில் அரசியல் சலசலப்பு.. லோக் ஜனசக்தி கட்சியில் சிக்கல்: சிராக் பஸ்வான் நீக்கமா?

பீகாரில் அரசியல் சலசலப்பு.. லோக் ஜனசக்தி கட்சியில் சிக்கல்: சிராக் பஸ்வான் நீக்கமா?

India Corona Cases, 14 June 2021: 10 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா சிகிச்சை எண்ணிக்கை

India Corona Cases, 14 June 2021:  10 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா சிகிச்சை  எண்ணிக்கை

Morning News Wrap | காலை 8 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 8 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

டாப் நியூஸ்

கீழடி கொடுக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்.. குழந்தையின் மண்டைஓடு கண்டுபிடிப்பு... ஆச்சரியத்தில் மக்கள்!

கீழடி கொடுக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்.. குழந்தையின் மண்டைஓடு கண்டுபிடிப்பு...  ஆச்சரியத்தில் மக்கள்!

Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!

Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Rajinikanth Health Update: 14 சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

Rajinikanth Health Update: 14  சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!