President Speech: "2070ம் ஆண்டிற்குள் மாசில்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு" - ஜனாதிபதி திரௌபதி முர்மு
2070ம் ஆண்டிற்குள் மத்திய அரசு மாசில்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது என்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இரு அவை உறுப்பினர்கள் முன்னிலையிலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,
வைப்ரண்ட் கிராமங்கள்:
“நாட்டின் எல்லைப்பகுதிகளில் உள்ள கிராமங்களை மேம்படுத்த வைப்ரண்ட் கிராமங்கள் திட்டம் அறிமுகம். அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ராணுவ தளவாட தயாரிப்பில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டிலே போர் விமானங்களை கட்டமைக்கும் அளவுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 90 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதியதாக தொடங்கப்பட்டுள்ளன. நாட்டுக்கு இளைஞர்கள் சேவையாற்றும் வாய்ப்பை அளிக்க பாதுகாப்பு படையில் அக்னிவீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டள்ளது. உலக அளவில் செமி கண்டக்டர் உற்பத்தி செய்யும் மையமாக இந்தியா உருவெடுக்கும். பிராட்பேண்ட் சேவைத்துறையில் இந்தியா புதிய புரட்சி செய்துள்ளது.
பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி:
ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். உலக அளவில் விளையாட்டுத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. நாட்டில் ஜனநாயகம், சமூக நீதிக்கு ஊழல் மிகப்பெரிய எதிரியாக அமைந்துள்ளது. பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற நிதி மோசடியாளர்களை நாட்டுக்கு திரும்ப கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்ப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து துறையில் உலக அளவில் இந்தியா 3வது பெரிய நாடாக திகழ்கிறது. உள்நாட்டிலேயே முதல்முறையாக விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலை இந்தியா கட்டமைத்தது நாம் அனைவருக்கும் பெருமை ஆகும். உலக அளவில் பசுமை எரிசக்தி துறையில் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மாசில்லாத இந்தியா:
2070ம் ஆண்டிற்குள் மாசில்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்திய ரயில்வேயை நவீனமயமாக்க இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள். தொலைதூரத்தில் உள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீர் ஆகியவை ரயில் போக்குவரத்து மூலம் இணைப்பு. எரிசக்தி பாதுகாப்பில் பசுமை ஹைட்ரஜ் கொள்கை முக்கிய பங்காற்றுகிறது. நாட்டில் சூரியசக்தி பயன்பாடு கடந்த 8 ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரித்துள்ளது.”
இவ்வாறு அவர் பேசினார்.