மேலும் அறிய

Droupadi Murmu Address to Nation: ”அரசியல் சாசனத்தினை வழங்கிய அம்பேத்கருக்கு இந்த நாடு எப்போதும் கடமைப்பட்டுள்ளது.” - குடியரசு தின உரையில் திரௌபதி முர்மு..!

நாட்டின் 74வது குடியரசு தினத்தினை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

நாட்டின் 74வது குடியரசு தினத்தினை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். 

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “74வது குடியரசு நாளில் நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன். நாம் ஜனநாயக குடியரசாக வெற்றிபெற்றுள்ளோம். தேசிய கல்விக் கொள்கையால் லட்சிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்ணில் ஏவும் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், நாம் நட்சத்திரத்தில் கூட கால் பதிப்போம். கரீப் கல்யாண் யோஜனா திட்டம் ஏழைகளுக்கு கொரோனா பெருந்தொற்றில் நிவாரணம் கிடைக்க உதவியது” என அவர் கூறிப்பிட்டு உரையாற்றி உள்ளார். 

மேலும், அவர் நமக்கு அரசியல் சாசனத்தினை வழங்கிய டாக்டர் அம்பேத்கருக்கு இந்த நாடு எப்போதும் கடமைப்பட்டுள்ளது என குறிப்பிட்டு பேசினார். குடியரசு தினத்தினைக் கொண்டாடும் இந்த நேரத்தில்  நாமது சாதனைகளையும் இணைந்து கொண்டாடுவோம். மதங்களும் மொழிகளும் நம்மைப் பிரிக்கவில்லை, அவை அனைத்தும் நம்மை இணைத்துள்ளன. இந்த நன்னாளில் இந்திய அரசியலமைப்பை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி. அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து இன்று வரை நமது பயணம் ஆச்சரியமானது. 

இந்தியாவின் பயணம் பல நாடுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. மகாத்மா காந்தியின் குறிக்கோளின்படி நாம் சுதந்திரத்தினை அடைந்தோம், தேசிய கல்விக் கொள்கையால் லட்சியமாற்றங்கள் பல செய்யப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கையில் கல்வியை விரிவு படுத்துவதிலும், ஆழப்படுத்துவதிலும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. ககன்யான் திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நம் நாடு மனிதர்களை விண்ணில் ஏஎவும் விண்கலத்தினை விண்ணுக்கு ஏவவுள்ளது. நாம் நட்சத்திரத்தில் கூட கால் பதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. 

இளம்பெண்கள் கல்வி உள்ளிட்ட துறைகளில் பங்களிப்பது ஆச்சரியப்படுத்துகிறது. மத்திய அரசின் பல திட்டங்கள் ஏழை எளியவர்களுக்கு பயனளிப்பதாக உள்ளது. நமது அரசியல் சாசனம் எதிர்காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எப்போதும் வழிகாட்டியாகவே உள்ளது. நமது அரசியல் சாசனத்தினை பின்பற்றுவது நமது கடமை. நமது நாகரீகம் மிகவும் பழமையானது. நமது நவீன ஜனநாயகம் இயற்கையாகவே இளமையானது. அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தொலைநோக்கு பார்வை இந்தியாவை நம்பிக்கையான தேசமாக மாற்ற வழிவகுத்தது” இவ்வாறு குடியரசுத் தலைவர் முர்மு தனது குடியரசு தின உரையில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget