Viral news: தோழி மீது காதல்! குடும்பத்தில் தொடர் எதிர்ப்பு - ஆணாக மாறிய இளம்பெண்!
தோழி மீது கொண்ட காதலுக்காக ஆணாக மாறிய பெண்ணின் செயல் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து தன்பாலின உறவுகளுக்கு எதிரான எதிர்ப்பு தொடர்ந்து கொண்டே வருகிறது. அப்படி ஒரு தன்பாலின உறவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பெண் ஒருவர் ஆணாக மாறியுள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் பெண் ஒருவர் சக தோழி ஒருவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். அவர்கள் இருவரின் உறவிற்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இரு குடும்பத்தையும் சமாதானம் செய்ய சில முயற்சிகளை எடுத்துள்ளனர். எனினும் அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. தன்னுடைய தோழியை பிரிய முடியாமல் அந்தப் பெண் ஒரு முடிவை எடுத்துள்ளார்.
அதாவது அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் முடிவை எடுத்துள்ளார். இதற்காக அவர் பிரயாக்ராஜ் பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றை நாடியுள்ளார். அங்கு மருத்துவர்கள் அப்பெண்ணிற்கு உரிய பரிசோதனை செய்து பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அவரின் ஒப்புதலுடன் இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் குழு ஒன்று செய்துள்ளது.
இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக மருத்துவர், “இப்பெண்ணிற்கு வெற்றிகரமாக பாலின மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அவர் இன்னும் 1.5 ஆண்டுகளில் முழுவதுமாக ஆணாக மாறிவிடுவார். அவருக்கு ஆண் சுரப்பையான டெஸ்டோஸ்டிரான் தெரபி அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் அவருடைய நெஞ்சில் முடி வளரும். இந்த முதல் முறையாக எங்களுடைய மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. இது மொத்தமாக முடிய 18 மாதங்கள் வரை எடுக்கும். அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.
பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த பின்பு தற்போது அப்பெண் கரு தரிக்க முடியாது. மேலும் தற்போது தன்னுடைய தோழியுடன் வாழ எந்தவித எதிர்ப்பும் இருக்காது என்று அப்பெண் தெரிவித்துள்ளார். தோழி மீது கொண்ட காதலுக்காக ஒருவர் தன்னுடைய பாலினத்தை மாற்றும் அளவிற்கு சென்றுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க:`15 ரோல்கள்.. ஒவ்வொன்றும் தலா 30 மீட்டர்.. 5 கிலோ எடை!’ - தம்பிக்காக உலக சாதனை செய்த அக்கா!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்