இராமாயணத்தை கொச்சைப்படுத்தினார்களா புதுச்சேரி மாணவர்கள்? போராட்டம் நடத்திய ஏ.பி.வி.பி. அமைப்பு
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இராமாயணத்தை இழிவுபடுத்தும் வகையில் நாடகம் இயற்றியதாக கூறி ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் ராமாயணத்தை இழிவுபடுத்தும் வகையில் நாடகம் இயற்றியதாக கூறி ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்
கல்லூரி கலை விழா:
தென்னிந்தியாவில் உள்ள பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஆண்டு கலாச்சார விழா, கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 29) நடைபெற்றது.
அப்போது, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கலை பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், இராமாயணத்தை அடிப்படையாக கொண்டு நாடகம் இயற்றியுள்ளனர். இராமாயணத்தில் சீதா மற்றும் ராவண கதாபாத்திரத்தை தொடர்புபடுத்தி நாடகம் இயற்றியதாக கூறப்படுகிறது. கலை விழாவின் போது, நாடகத்தில் சீதா, இராவணன் உள்ளிட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். அதில், ராமாயணத்திற்கு இருப்பதற்கு மாறாக கதாபாத்திரங்களை மாற்றி அமைத்து நாடகம் நடித்ததாக கூறப்படுகிறது.
இது இராமாயண கதாபாத்திரத்தை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகவும் கூறி, ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
Official Press Release Statement of ABVP Pondicherry University Unit on the issue of Mockery of Ramayana. pic.twitter.com/fX2vhVEGba
— ABVP Pondicherry University (@PondiUniABVP) March 31, 2024
இந்நிலையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழக கலை விழாவில நடைபெற்ற ராமாயணம் நாடகம் தொடர்பால் ஏபிவிபி பிரிவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
படைப்பு சுதந்திரம் என்ற போர்வையில் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மத நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கான மரியாதை மிக முக்கியமானது, மேலும் எந்த வகையான வெறுப்பு பேச்சு அல்லது கேலியும் கண்டிக்கப்பட வேண்டும்.
Karyakartas of @ABVPPondicherry University protested against the Department of Performing Arts, Pondicherry University for organising a derogatory play on Prabhu Shri Ram and Mata Sita.
— ABVP (@ABVPVoice) March 31, 2024
Such actions under the guise of creative liberty are unacceptable. Respect for religious… pic.twitter.com/jLeOVC7TSe
இந்த வகையிலான நாடகத்தை எழுதியவரும் இயக்குனருமான கலைத்துறைத் தலைவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஏபிவிபி வலியுறுத்துகிறது என ஏபிவிபி பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Panguni Festival: பங்குனி திருவிழா! ஒழுகைமங்கலம் ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில் கொடியேற்றம்!