(Source: Poll of Polls)
Panguni Festival: பங்குனி திருவிழா! ஒழுகைமங்கலம் ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில் கொடியேற்றம்!
பிரசித்தி பெற்ற ஒழுகைமங்கலம் ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.
ஒழுகைமங்கலம் ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்கலத்தில் அமைந்துள்ளது உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பங்குனி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.
சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றாக திகழும் இக்கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு பூச்சொரிதல் புஷ்பா அபிஷேகம் நடைபெற்று. அதனைத்தொடர்ந்து இன்று கொடியேற்றத்துடன் பங்குனித் திருவிழா தொடங்கியது.
PM Modi: கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது எப்படி? - காங்கிரசை ஒருபோதும் நம்பக்கூடாது : பிரதமர் மோடி
கொடியேற்றம்
முன்னதாக அம்மன் கோயில் பிரகாரத்தில் வலம் வந்து கோயில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினார். அதனையடுத்து கொடிமரத்திற்கு மஞ்சள், பால், பன்னீர், திரவியம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பங்குனி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அடுத்த ஞாயிற்றுக்கிழமை திருத்தேர் திருவிழாவும், பிறகு தெப்பத் திருவிழா, உதிர்வாய் துடைப்பு உற்சவம், மஞ்சள் நீர் உற்சவம் நடைபெற உள்ளது.
மேலும் இன்று நடைபெற்ற கொடியேற்றத்தில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தல வரலாறு:
இங்குள்ள அம்மன் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சுயம்புவாக தோன்றியதாக கூறப்படுகிறது. மேலும் பசு அம்மன் பூமிக்கு அடியில் இருப்பதை உணர்த்தும் விதமாக அங்க பசு பால் சுரந்துள்ளது. அதனையடுத்து இவ்வூர் ஒழுகைமங்கலம் என பெயர் பெற்றுள்ளது.
கோயில் சிறப்புகள்
ஆடிப்பெருக்கு நாளில் கோயிலுக்கு அருகில் உள்ள மகிமலையாற்றில் தீர்த்தவாளி வைபவம் நடைபெறும். உற்சவரான சீதளா பரமேஸ்வரி, காந்தவராயன், பேச்சியம்மன், கருப்பன் ஆகியோர் தனிச்சன்னதிகளில் காட்சி தருகின்றனர். கோயிலின் தீர்ந்தக் குளத்தில், சர்க்கரை மற்றும் உப்பு கரைத்துப் பிரார்த்தித்தால், உடலில் உள்ள கட்டி போன்றவையும் மனக் கஷ்டங்களும் விரைவில் கரைந்து காணாமல் போகும். கோயிலின் வேப்பமரத்தில் மஞ்சள் சரடு கட்டி வழிபட்டால் கல்யாண வரம் கைகூடும், தொட்டில் கட்டி பிரார்த்தித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வழிபாடு:
தம்பதிகள் ஒத்துமையுடன் வாழ, பிரித்தவர்கள் ஒன்று சேர், குடும்பம் செழிக்க, வம்சம் தழைக்க இந்த அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். அம்மனுக்குப் புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வேண்டிக் கொள்கின்றனர். தவிர அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து விளக்கேற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.