PM Modi Foreign Visit: ஃப்ரான்ஸ் டூ அமெரிக்கா - ட்ரம்ப் உடன் டின்னர், இன்று தொடங்கும் பிரதமர் மோடியின் பயணம் - முழு விவரம்
PM Modi US Foreign Visit: பிரதமர் மோடியின் ஃப்ரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கான வெளிநாட்டு பயணம் இன்று தொடங்குகிறது.

PM Modi US Foreign Visit: பிரதமர் மோடியின் ஃப்ரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம்:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று வெளிநாட்டுப் பயணத்த தொடங்குகிறார். பிப்ரவரி 10-12 தேதிகளில் நடைபெறும் தனது இரண்டு நாள் ஃப்ரான்ஸ் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, AI உச்சி மாநாடு முதல் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கான வட்டமேசை மாநாடு வரை பல நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை முடித்துக்கொண்டு கட்டண அச்சுறுத்தல்கள் மற்றும் சட்டவிரோத குடியேற்றப் பிரச்சினைக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பிற்காக, பயணத்தின் இரண்டாம் கட்டமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
ஃப்ரான்ஸில் பிரதமர் மோடியின் திட்டங்கள்:
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக, ஃப்ரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் பாதுகாப்புத் துறை, சிறிய அளவிலான அணு உலைகள், இந்தியாவில் விமான MRO (பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல்) வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில், இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
பயண திட்டம்:
- பிப்ரவரி 10-ம் தேதி மாலை பாரிஸில் தரையிறங்கும் பிரதமர், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வழங்கும் விஐபி விருந்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிப்ரவரி 11-ம் தேதி, பிரதமர் மோடி, மாக்ரோனுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு (AI) செயல் உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் சீனாவின் துணைப் பிரதமர் டிங் சூசெக்ஸியாங் ஆகியோரும் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
- இந்த உச்சிமாநாட்டில் AI இல் பொது நலன், வேலையின் எதிர்காலம், புதுமை மற்றும் கலாச்சாரம், AI மீதான நம்பிக்கை மற்றும் AI இன் உலகளாவிய நிர்வாகம் ஆகிய முக்கிய கருப்பொருள்கள் பற்ற் விவாதிக்கப்பட உள்ளது.
- 2023 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலும், 2024 ஆம் ஆண்டில் தென் கொரியாவிலும் AI தொடர்பான இதேபோன்ற உச்சிமாநாடுகள் நடத்தப்பட்டன. முந்தைய உச்சிமாநாட்டில், அரசாங்கங்களுக்கிடையே அதிக ஒருங்கிணைப்புக்காக ஒரு AI அறக்கட்டளையை உருவாக்க ஃப்ரான்ஸ் முன்மொழிந்தது.
- பிப்ரவரி 11-ம் தேதி மதியம், பிரதமர் ஃப்ரான்ஸ் அதிருபருடன் தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வார்.
- தொடர்ந்து பிரதமர் மோடி மார்சேய் நகருக்குச் சென்று அங்கு மாக்ரோனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்.
- இரு தலைவர்களும் போர் கல்லறைக்குச் சென்று முதலாம் உலகப் போரில் இந்திய வீரர்கள் செய்த தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
- மேலும், கூட்டாக மார்சேயில் இந்திய துணைத் தூதரகத்தைத் திறந்து வைப்பார்கள், சர்வதேச வெப்ப அணுசக்தி சோதனை உலை அமைந்துள்ள கடாஷைப் பார்வையிடுவார்கள்.
- அதைத் தொடர்ந்து தனிப்பட்ட இரவு விருந்தில் கலந்து கொள்வார். பின்னர், அதிபர் டொனால்ட் டிரம்புடனான தனது முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பிற்காக அமெரிக்காவிற்கு விமானம் மூலம் புறப்படுவார்.
அமெரிக்காவில் பிரதமர் மோடி
ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பின்பு முதல்முறையாக, அவரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அமெரிக்காவில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். குறிப்பாக பிப்ரவரி 13 ஆம் தேதி அதிபர் ட்ரம்பை சந்திக்க உள்ளார். அப்போது இறக்குமதி வரிகளைக் குறைத்தல், அமெரிக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை அதிகரித்தல் மற்றும் நீண்டகால வர்த்தக பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் விவாதங்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது குறித்தும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு, ட்ரம்ப் சிறப்பு விருந்து அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

