மேலும் அறிய

PM Modi: ஆதித்யா எல்.1 வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

PM Modi: ஆதித்யா L1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூரியன் குறித்து ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா L1 விண்கலம் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து

ஆதித்யா L-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படது தொடர்பாக நரேந்திர மோடியின் பதிவில்” சந்திரயான் -3 யை தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியி இந்தியாவின் பயணம் வெற்றியுடன் தொடர்கிறது.  சூரியனை ஆய்வு செய்வதில் இந்தியாவின் முதல் முயற்சியாக ஆதித்யா எல்.1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என் பாரட்டுகள். இப்படியான தொடர் முயற்சிகள் மூலம் மானுடத்தின் வளர்ச்சிக்காக பிரபஞ்சம் குறித்த புரிதல்களுக்கு வழிவகுக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

PM Modi: ஆதித்யா எல்.1 வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்கலம் மூன்றாம் நிலையை அடைந்துள்ள நிலையில், செய்லபாடுகள் திருப்திகரமாக உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 2,298 கி.,மீ. உயரத்தில் இருந்து ஆதித்யா விண்கலம் தனித்து தனது பயணத்தை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

ஆதித்யா எல்.1 வெற்றி 

சுமார் 125 நாட்கள் சூரியனை நோக்கி பயணித்து, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்து சூரியன் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை ஆதித்யா எல்.1 விண்கலம் செய்ய உள்ளது. 1,485 கிலோ எடை கொண்ட  ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் வெப்பசூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மட்டுமே இதுவரை சூரியனை ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பியுள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. அதோடு, நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து சூரியனையும் ஆய்வு செய்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

ஆய்வுகள் என்ன?

பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய உள்ளது. 

தொழில்நுட்ப விவரங்கள்

சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய இதில் விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer), சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் டைனமிக் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் ( High Energy L1 Orbiting X-ray Spectrometer), கிரகங்களுக்கு இடையேயான காந்த புலதன்மையை அளவிடும் மேக்னோ மீட்டர் என்ற ஆகிய கருவிகள் உள்ளன. இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
HOLIDAY : விடுமுறை லிஸ்ட் ரெடி.! 2026ஆம் ஆண்டில் இத்தனை நாட்களா.? குஷியில் அரசு ஊழியர்கள், மாணவர்கள்
விடுமுறை லிஸ்ட் ரெடி.! 2026ஆம் ஆண்டில் இத்தனை நாட்களா.? குஷியில் அரசு ஊழியர்கள், மாணவர்கள்
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Embed widget